2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

15 கடைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Kogilavani   / 2015 நவம்பர் 30 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

ஹட்டன் நகரில் பழைய விலைகளுக்கு பொருட்களை விற்பனை செய்த சுமார் 15 கடைகளின் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்டத்தின் நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வரவு-செலவு திட்டத்தின் ஊடாக 11 அத்தியவசிய பொருட்களுக்கு விலைகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், அந்தவிலை பட்டியலை கடைப்பிடிக்காது பழைய விலைகளுக்கே பொருட்களை விற்பனை செய்த வர்த்தக நிலையங்கள் நேற்று(29) சுற்றி வளைக்கப்பட்டன.

நுவரெலியா மாவட்டத்தின் நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் ,ந்த திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். இதன்போது பல வியாபார நிலையங்களில் பழைய விலைக்கே பொருட்கள் விற்பனை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டன.  

மேலும் பல நகரங்களில் எதிர்வரும் நாட்களிலும் ,வ்வாறான சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.

நாடாளுமன்றத்தில் கடந்த 20ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட வரவு-செலவு திட்டத்தில் கருவாடு, நெத்திலி, பருப்பு, பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு உட்பட 11 அத்தியவசிய பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .