2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

காந்தியின் 8,500 கடிதங்கள் வெளியிடப்படும்

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 30 , பி.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்னுடைய காலத்தின், உலகின் ஆளுமைகளுடனான மகாத்மா காந்தியின் உரையாடல்களைப் பற்றிய தெளிவான விவரங்களை ஏற்படுத்தும் பொருட்டு, மகாத்மா காந்திக்குக் கிடைக்கப்பெற்ற 8,500க்கும் மேற்பட்ட கடிதங்களை வெளியிடுவதற்கு, சபர்மதி ஆசிரமம் முடிவெடுத்துள்ளது.

மகாத்மா காந்தியினால் எழுதப்பட்ட 31,000க்கும் மேற்பட்ட கடிதங்கள், மகாத்மா காந்தியின் சேகரிக்கப்பட்ட ஆவணங்கள் செயற்றிட்டத்தினூடாக, ஏற்கெனவே சேகரிக்கப்பட்டுள்ள போதிலும், அவருக்குக் கிடைக்கப்பெற்ற கடிதங்கள் தொடர்பாக இதுவரை ஆவணப்படுத்தப்படவில்லை.எனவே, அவற்றை ஆவணப்படுத்தி, வெளியிடுவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதில், நொபெல் பரிசுவென்ற பிரெஞ்சு எழுத்தாளர் றொமெய்ன் றோலன்ட், இந்தியக் கவிஞர் ரபீந்திரநாத் தாகூர், இந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு, சுதந்திரப் போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடு உள்ளிட்ட பலருடனான கலந்துரையாடல்கள் வெளிப்படுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .