2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

முறையான மீள்குடியேற்றம் கோரி ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 30 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், நஹீம் முஹம்மட் புஹாரி,ஏ.எம்.ஏ.பரீத்

கடந்தகால ஆயுத வன்முறைகளினால் இடம்பெயர்ந்த தம்மை மீள்குடியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி திருகோணமலை மூதூர்-ஜபல் கிராம மக்கள் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்.

மூதூர் பிரதேச செயலக வளாகத்துக்கு முன்பாக  திரண்ட கிராம மக்கள் மேற்படி கோரிக்கையை  முன்வைத்து மூதூர் பிரதேச செயலாளர் வெள்ளக்குட்டி முஹம்மத் யூசுப்பிடம் மகஜரையும்;  கையளித்தனர்.

1985 மற்றும் 2006ஆம் ஆண்டு காலப்பகுதியில்; இரு தடவைகள் தமது கிராமத்தில் வலிந்து மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளால் தாங்கள்  விரட்டப்பட்டதாகவும் அவ்வாறானவர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் இன்னமும் வாழ்விடமின்றி அலைந்து திரிவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

389 குடும்பங்கள் தமக்கு முறையான மீள்குடியேற்றம் வேண்டுமென்று கோரியுள்ளனர்.

தங்கள் சொந்த முயற்சியில் கொட்டில்களை அமைத்துக்கொண்டு இதுவரையில் 121 குடும்பங்கள் அந்தக் கிராமத்துக்கு மீளத் திரும்பியுள்ளதாகவும் ஆனால், தங்களுக்கு அரசாங்க உதவிகளோ அரசசார்பற்ற நிறுவனங்களின் உதவிகளோ கிடைக்கவில்லை எனவும் அவர்கள்  கூறினர்.

வீடுகள் அமைத்துக்கொடுத்து,  ஏனைய அடிப்படை வசதிகளையும்  உரிய வகையில் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமெனவும்  இம்மக்கள் கோரியுள்ளனர்.

இது தொடர்பில் தாம் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அறிவித்து நடவடிக்கை எடுப்பதாக பிரதேச செயலாளர் தெரிவித்ததை அடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .