2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

'பள்ளிவாயல்களில் கடமையாற்றுபவர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும்'

Niroshini   / 2015 நவம்பர் 30 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

பள்ளிவாயல்களில் கடமையாற்றும் கதீப்மார் இமாம்கள் மற்றும் முஅத்தீன்கள்களுக்கு ஓய்வூதியத்திட்டமொன்றை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவையின் அனுமதியை கோருவதுடன் அதை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக காத்தான்குடி பள்ளிவாயல்கள் கதீப்மார் இமாம்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பள்ளிவாயல்களில் கடமையாற்றும் கதீப்மார் இமாம்கள் மற்றும் முஅத்தீன்கள்களுக்கு ஓய்வூதியத்திட்டமொன்றை ஏற்படுத்த முஸ்லிம் சமய கலாசார விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் முன் வந்திருப்பது பாராட்டுக்குரியது.

பள்ளிவாயல்களில் கடமையாற்றும் கதீப்மார் இமாம்கள் மற்றும் முஅத்தீன்கள்களுக்கு ஓய்வூதியத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு முஸ்லிம் சமய கலாசார விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சு வக்பு பிரிவு அமானா தக்காபுல் நிறுவனத்துடன் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக முஸ்லிம் சமய கலாசார விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இந்த விடயம் பள்ளிவாயல்களில் கடமையாற்றும் கதீப்மார் இமாம்கள் மற்றும் முஅத்தீன்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

கதீப்மார் இமாம்கள் மற்றும் முஅத்தீன்கள்கள் பள்ளிவாயல்களில் நீண்டகாலமாக அவர்களின் ஆயுள் அல்லது முதுமை வரைக்கும் பல சிரமங்களுக்கு மத்தியில் இறை பணியாற்றுகின்றனர்.

இவ்வாறு மிக நீண்ட காலம் பள்ளிவாயல்களில் கடமையாற்றி விட்டு இயலாத காலத்தில் வெறும் கையோடு வீட்டுக்குச் சென்று எவ்வித வருமானமுமின்றி கஸ்டங்களுக்கு மத்தியில் நோய்வாய்ப்பட்ட நிலையில் தமது வாழ்வை கழிக்கின்றனர்.

இவர்கள் இறைபணி செய்தவர்கள் என சமுதாயமும் இவர்களை திரும்பிப் பார்ப்பதில்லை.

இந்த நிலையில் தனியார் துறைக்கு ஓய்வூதியம் வழங்கும் குறித்த திட்டத்தினை அறிமுகப்படுத்தவுள்ள  இந்த சந்தர்ப்பத்தில் அமைச்சர் ஹலீம்,சமுதாய நலன் கருதி பள்ளிவாயல்களில் கடமையாற்றும் கதீப்மார் இமாம்கள் மற்றும் முஅத்தீன்கள்களுக்கு ஓய்வூதியத்திட்டத்தினையும் அமுல்படுத்துவதற்கு அமைச்சரவையின் அனுமதியை கோர வேண்டும் என இந்த சந்தர்ப்பத்தில் வேண்டுகோள்விடுக்கின்றோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .