2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பாகிஸ்தான் , இங்கிலாந்து ஒரு நாள் சர்வதேசப் போட்டித் தொடர் மீள் பார்வை

Shanmugan Murugavel   / 2015 நவம்பர் 21 , பி.ப. 12:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ச.விமல்

டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணியிடம் இங்கிலாந்து தோல்வியடைந்திருந்த நிலையில் ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் அனுபவமற்ற புதிய இங்கிலாந்து அணி பாகிஸ்தான் அணியை வென்று பழி தீர்த்துக் கொண்டது.

முதற் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றதுடன்  பாகிஸ்தான் அணிக்கே  இத் தொடரும் என்ற அனுமானத்துக்கு வந்திருந்த போதும், இங்கிலாந்து அணி புதிய அணி. அனுபவமற்ற அணி,  ஐக்கிய அரபு அமீரகத்தில் விளையாடுகின்றனர். பாகிஸ்தான் அணியில் அனுபவமான வீரர்கள் உள்ள கலவை அணி. பாகிஸ்தான் அணியும் ஓரளவு புதியாக அணியாக இருந்தாலும்  இங்கிலாந்து அணியிலும் பார்க்க அனுபவம் உள்ள அணி. பாகிஸ்தான் அணியை எவ்வாறு இனி தொடரில் வெல்ல இயலும் என்று எதிர்பார்த்து இருக்க,  தொடர்ந்து வந்த 3 போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று 4 போட்டிகள் அடங்கிய தொடரை 3 - 1 என்ற ரீதியில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது.

உலகக் கிண்ண தொடரில் முதல் சுற்றுடன் இங்கிலாந்து அணி வெளியேறியது. அதன் பின்னர் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. புதிய அணியாக இங்கிலாந்து அணி களத்தில் இறங்கி அவுஸ்திரேலிய அணியுடனான தொடரில் சிறப்பாக விளையாடி இருந்தது. சொந்த மைதானம். அதனால் சிறப்பாக செயற்பட்டார்கள் என பேசப்பட்டது. ஆனால் இந்த தொடர் இங்கிலாந்து அணி புதிய பலமான அணியாக விஸ்வரூபம் எடுத்துள்ளது என்பதை நிரூபித்தது. 

மறுபுறத்தில் பாகிஸ்தான் அணியின் ஒரு நாள் அணிக்கு என்ன நடந்தது என்பது மிகப் பெரிய கேள்வியே. அனுபவமற்ற அஸார் அலியின் தலைமைத்துவம் மிகப் பெரிய கேள்வியாகவுள்ளது. டெஸ்ட் தொடரில் மிக சிறப்பாக விளையாடி வரும் பாகிஸ்தான் அணி அதனை ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளில் காட்ட முடியாமல் தடுமாறி வருகின்றது. அனுபவமான வீரர்களும், இளைய வீரர்களும் உள்ள கலவை அணி. உலகக்கிண்ணத் தொடரிலும் போதியளவு சிறப்பாக செயற்படவில்லை. அதன் பின்னர் தலைவராக அஸார் அலி நேரடியாக அணிக்குள் உள் வாங்கப்பட்டார். வேறு சில மாற்றங்களும் செய்யப்பட்டன. எதுவும் சரியாக வருவதாக தெரியவில்லை. உலகக்கிண்ண தொடரின் பின்னர் பாகிஸ்தான் அணி 18 போட்டிகளில் விளையாடியுள்ளது. இவற்றில் 8 போட்டிகளில் வெற்றியைப் பெற்றுள்ளது. இவற்றில் நான்கு போட்டிகள் சிம்பாவே அணியுடன் பெற்றவை. சிம்பாவே அணி ஒரு தடவை பாகிஸ்தான் அணியை வென்றுள்ளது. இப்படி மோசமாக அவர்களின் பெறுதிகள் அமைந்துள்ளன.

இனி பாகிஸ்தான் அணி எவ்வாறு அடுத்த கட்டம் நோக்கி நகரப்போகின்றது? மாற்றங்கள் கட்டாயம் செய்யப்பட வேண்டும். தெரிவுக் குழுவினர் என்ன மாற்றங்களை செய்யப்போகின்றார்கள் என்பது புரியாத புதிர்.  தரப்படுத்தல்களிலும் தொடர் தோல்வியின் மூலம் எட்டாமிடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி புள்ளிகளை இழந்து 87 புள்ளிகளுடன் எட்டாமிடத்தில் உள்ளது. அடுத்த இடத்துக்கு முன்னேறுவது இப்போதைக்கு கடினம். இன்னும் ஒரு புள்ளியை இழந்தால் ஒன்பதாமிடத்துக்கு பின் தள்ளப்படும். இங்கிலாந்து அணி புள்ளிகளை அதிகரிக்கச் செய்துள்ளது. 101 புள்ளிகளுடன் ஆறாமிடத்தில் உள்ளது.

இந்த தொடரில் பாகிஸ்தான் அணிக்கு துடுப்பாட்டம் பிரச்சினையாக இருந்துள்ளது. பந்துவீச்சு ஓரளவு பரவாயில்லை என்று சொல்ல முடியும். ஆனால் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டம் சிறப்பாக அமைய பந்து வீச்சாளர்கள் எதனையும் பெரிதாக செய்ய முடியவில்லை. இங்கிலாந்து அணியின் பந்துவீச்சும் பலமாக அமைய பாகிஸ்தான் துடுப்பாட்ட வீரர்கள் தடுமாறினர். இங்கிலாந்து அணியின் சமபல அணியாக செயற்பட்ட விதமும் அனைத்து வீரர்களும் ஒருமித்து விளையாடிய விதமும் அவர்களுக்கான வெற்றியைப் பெற்றுக்கொடுத்தது. பாகிஸ்தான் அணியில் ஒவ்வொரு போட்டியிலும் ஒவ்வொருவர் என்பது போன்றே செயற்பட்டுள்ளனர். இதுதான்  இந்த இரு அணிகளுக்குமிடையிலான வித்தியாசம். ஓட்டங்களைப் பெற்றவர்கள், விக்கெட்களை கைப்பற்றியவர்கள் பட்டியலைப் பார்த்தால் ஒருவர் அல்லது இருவர் பாகிஸ்தான் அணி சார்பாக   பட்டியலில் முன்னணியில் உள்ளனர். மிகுதி அனைவரும் இங்கிலாந்து வீரரகள். ஒருவர் இருவரில் அணி தங்காமல் அனைவரிலும் அணி தங்கி இருந்தால் அந்த அணி வெற்றி பெறும் என்பதற்கு இந்த தொடர் நல்ல ஒரு உதாரணம்.  

 

மொஹமட்  ஹபீஸ்  4    4    1    184   102 *      61.33  75.10      1    0

ஜோஸ் பட்லர்            4    4    2    177   116 *      88.50  155.26      1    0

அலெக்ஸ் ஹேல்ஸ்  4    4    0    171   109        42.75  84.65        1    0

ஜேசன் ரோய்               4    4    0    163   102         40.75 89.56         1    1

ஒய்ன்  மோர்கன்         4    4    0    154   76           38.50 78.57          0    1

ஜேம்ஸ்  டெய்லர்       4    4    2    149   67 *           74.50 86.12         0    2

ஜோ  ரூட்                     4    4    0    145   71              36.25 85.79         0    2

பாபர் அசாம்                 4    4    1    139   62 *            46.33 93.28         0   2

சப்ராஸ்  அகமட்          4    3    0    114   64               38.00  89.06       0   1

அசார் அலி                    4    4    0    110   44               27.50 78.01       0   0

சொயிப் மலிக்              4    4    0    107   52                26.75 86.99       0  1

(போட்டிகள், இனிங்ஸ், ஆட்டமிழக்கவில்லை, ஓட்டங்கள், கூடிய ஓட்டங்கள், சராசரி, ஸ்ட்ரைக் ரேட், சதம், அரைச் சதம்)

 

க்றிஸ்  வோக்ஸ்             4    4    34.3  159   8    4/33 19.87 4.60

மொஹமட்  இர்பான்       4    4    37.0  174   7    3/35 24.85 4.70

டேவிட் . வில்லி              4    4    31.0 147   6    3/25 24.50 4.74

ரீஸ் டொப்லி                    4    4    35.5  158   6    3/26 26.33 4.40

மொயின்  அலி                  4    4    36.4   165 6    3/53 27.50 4.50

ஆதில் ரசிட் (இங்கி)          4    4    39.0  221 4    3/78 55.25 5.66

(போட்டிகள், இன்னிங்ஸ், ஓவர்கள், வழங்கிய ஓட்டங்கள், விக்கெட்கள், சிறந்த பந்துவீச்சு , சராசரி, ஓட்ட சராசரி வேகம்)

               

 

போட்டிகள் மீள் பார்வை

 

முதற் போட்டி

இங்கிலாந்து அணி 216/10 (49.4)

ஒய்ன் மோர்கன் - 76

ஜேம்ஸ் ரெய்லர் - 60

மொஹமட் இர்பான் -  35/3

அன்வர் அலி  - 32/2

சொய்ப் மலிக் - 45/2

பாகிஸ்தான் அணி 217/4 (43.4)

மொஹமட் ஹபீஸ் - 102

பாபர் அசாம் - 62

ரீஸ் டொப்லி  - 26/3

போட்டியின் நாயகன் - மொஹமட் ஹபீஸ்

 

இரண்டாவது போட்டி

இங்கிலாந்து அணி 283/5 (50)

அலெக்ஸ் கேல்ஸ் - 109

ஜோ ரூட் - 63

ஜேசன் ரோய் - 54

வஹாப் ரியாஸ் - 43/3

பாகிஸ்தான் அணி 188/10 (45.5)

சப்ராஸ் அகமட் - 64

க்றிஸ் வோக்ஸ் - 33/4

டேவிட் வில்லி - 25/3

போட்டியின் நாயகன் - அலெக்ஸ் கேல்ஸ்

 

மூன்றாவது போட்டி

பாகிஸ்தான் அணி 208/10 (49.5)

மொஹமட் ஹபீஸ் - 45

 

க்றிஸ் வோக்ஸ் - 40/4

 

இங்கிலாந்து அணி - 210/4 (40)

ஜேம்ஸ் ரெய்லர் - (67 ஆ.இ)

ஜோஸ் பட்லர் - 49(ஆ.இ)

 

சபார் கொஹர் - 54/2

 

போட்டியின் நாயகன் - ஜேம்ஸ் ரெய்லர்

நான்காவது போட்டி

இங்கிலாந்து அணி - 355/5 (50)

ஜோஸ் பட்லர் - 116(ஆ.இ  - 52)

ஜேசன் ரோய் - 102

ஜோ ரூட் - 71

மொஹமட் இர்பான் - 64/2

ஆசார் அலி - 26/2

பாகிஸ்தான் அணி - 271/10 (40.4)

சொய்ப் மலிக் - 52

பாபர் அசாம் - 51

மூயேன் அலி - 52/3

ஆதில் ரசீட் - 78/3

டேவிட் வில்லி -34/2

போட்டியின் நாயகன் - ஜோஸ் பட்லர்

 

ஒரு சதம் அடங்கலாக 177 ஓட்டங்களை 4 போட்டிகளிலும் பெற்றுக் கொண்ட இங்கிலாந்து அணியின் விக்கெட் காப்பாளர் ஜோஸ் பட்லர் போட்டித் தொடர்  நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X