2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

285 விற்பனை நிலைய உரிமையாளர்கள் சிக்கினர்

Kanagaraj   / 2015 நவம்பர் 30 , பி.ப. 05:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரவு - செலவுத் திட்டத்தில் விலை குறைக்கப்பட்ட பொருட்களை, அதிக விலைக்கு விற்பனை செய்த 285 விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார். அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்வோரைக் கண்டறியும் பொருட்டு, நுகர்வோர் அதிகார சபையின் அதிகாரிகள் முன்னெடுத்து விசேட வேலைத்திட்டத்தின் கீழ், கடந்த 48 மணித்தியாலங்களில் சுமார் 285 விற்பனை நிலைய உரிமையாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.

அதிக விலையில் பொருட்களை விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ், குறித்த வியாபாரிகளை அவர்கள் வசிக்கும் பிரதேசங்களில் உள்ள நீதிமன்றங்களில் ஆஜர் செய்;ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X