2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வெலே சுதா விவகாரம்: நடிகை உள்ளிட்ட 20 பேருக்கு சிக்கல்

Kanagaraj   / 2015 டிசெம்பர் 01 , மு.ப. 03:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹெரோய்ன் போதைப்பொருள் வர்த்தகத்தினூடாக, பெருந்தொகையான பணம் மற்றும் சொத்துக்களைச் சேகரித்ததாகக் கூறப்படும் வெலே சுதா என்றழைக்கப்பட்ட கம்பொல விதானகே சமந்த குமார என்பவரிடம், பணம் பெற்றுக் கொண்டதாகக் கூறப்படும் பிரபல நடிகை உதயந்தி குலதுங்க உள்ளிட்ட இருபது பேரின் வருமான வரி அறிக்கையைச் சோதனைக்குட்படுத்துவதற்கு, அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டியவினால் இந்த அனுமதி, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு நேற்று திங்கட்கிழமை வழங்கப்பட்டது.

பொலிஸ்மா அதிபரின் கட்டளையின் பிரகாரம், குற்றப் புலனாய்வுப் பிரிவினால், நிதிச் சலவைச் சட்டத்தின் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையையடுத்தே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஹெரோய்ன் விற்பனையினூடாக கோடிக்கணக்கான பணம் மற்றும் சொத்துக்களைச் சேகரித்ததாகக் கூறப்படும் வெலே சுதா உள்ளிட்ட எட்டுப் பேருக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே, பிரபல நடிகை உள்ளிட்ட இருபது பேர், வெலே சுதாவிடம் பணம் பெற்றுக் கொண்ட விடயம், வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்றும், அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .