2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஆலையடிவேம்பில் தேசிய கிராம அபிவிருத்தி வேலைத்திட்டம்

Niroshini   / 2015 டிசெம்பர் 01 , மு.ப. 04:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

இளைஞர் விவகார அமைச்சின் அனுசரணையோடு தேசிய கிராம அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவில் நேற்று (30) முன்னெடுக்கப்பட்டது

ஆலையடிவேம்பு பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் கே.பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதேச செயலாளர் வி.ஜெகதீசன் கலந்து கொண்டு திட்டங்களை ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது,அளிக்கம்பை கிராமத்தில் கரப்பந்தாட்ட மைதானம் அமைத்தல் மற்றும் ஸ்ரீ இராமகிருஸ்ணா தேசிய பாடசாலைக்கான துவிச்சக்கர வண்டிகளுக்கான தரிப்பிடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்நிகழ்வுகளில்,புனித சவேரியார் ஆலயப் பங்குத்தந்தை அருட்திரு. தேவராஜ் அடிகளார், ஸ்ரீ இராமகிருஸ்ணா தேசிய பாடசாலை முதல்வர் எம்.கிருபைராஜா, பிரதி முதல்வர் எஸ்.லோகநாதன், அளிக்கம்பை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் அதிபர் எஸ்.மணிவண்ணன், ஆலையடிவேம்பு பிரதேச சம்மேளனத் தலைவர் கே.தேவதர்சன் பிரதேச செயலாளரின் வெகுஜனத் தொடர்புகள் உத்தியோகத்தர் எஸ்.ஜே.பிரேம் ஆனந்த், கிராம உத்தியோகத்தர் கே.லோகநாதன், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எல்.திருமுருகன் மற்றும் திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.பாக்கியராசா உள்ளிட்ட பலரும் கலந்துசிறப்பித்தனர்.

இதன்போது, தேசிய கிராம அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பாக இளைஞர் கழக உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டமும் குறித்த கல்லூரி வளாகத்தில் பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் கே.பிரபாகரன் தலைமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .