2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

வீதி புனரமைப்புக்கு நிதி ஒதுக்கீடு

Niroshini   / 2015 டிசெம்பர் 01 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் மௌலானா

கல்முனைக்குடி பகுதியில் நீண்ட காலமாக புனரமைப்பு செய்யப்படாமல் இருந்து வருகின்ற இரண்டு வீதிகளை புனரமைப்பதற்கு நெடுஞ்சாலைகள் அமைச்சு 3 கோடி 90 இலட்சம் ரூபாய் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.

இதன் பிரகாரம் கல்முனைக்குடி காசீம் வீதி, காபட் வீதியாகவும் தைக்கா வீதி, வடிகான் வசதிகளுடன் கொங்றீட் வீதியாகவும் புனரமைக்கப்படவுள்ளன.

வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கல்முனை காரியாலயத்தின் ஏற்பாட்டில் இவ்வீதிகளின் அபிவிருத்தி அங்குரார்ப்பண நிகழ்வு வெள்ளிக்கிழமை(04) பிற்பகல் 4.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

இதில், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகவும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.நிஸார், பிரதம பொறியியலாளர் எம்.வீ.அலியார், கல்முனை பிரதேச செயலாளர் எம்.எச்.கனி, கல்முனை மொஹிதீன் ஜூம்ஆப் பள்ளிவாசல் தலைவர் டொக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ், கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.எம்.பறக்கத்துல்லா, கல்முனை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்றுப் பொறியியலாளர் ஏ.எம்.எம்.ஜாபீர் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .