2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

பொலிஸ் பதிவேடு

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 01 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

விபத்தில் இருவர் பலி

பாதுக்க,போபே, குருலான பகுதியில் லொறியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில், மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவரான பாதுக்க பிரதேசத்தைச் சேர்ந்த மாணிக்கம் பிரதிப் (வயது 30) என்பவர் திங்கட்கிழமை (30) உயிரிழந்துள்ளதாக போபே பொலிஸார் தெரிவித்தனர்.

லொறியின் சாரதியை கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இதேவேளை, இங்கிரிய, கிரிகல பகுதியில் காரொன்றும் மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில், மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவரான ஹதபான்கொட பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவர்,  திங்கட்கிழமை (30) உயிரிழந்துள்ளதாக இங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

காரின் சாரதியை கைது செய்துள்ள பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

இளைஞன் பலி; பெண் கைது

வவுனியா, அம்பலன்கொடெல்ல பகுதியில், திங்கட்கிழமை (30) மாலை 6 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், மோட்டார் சைக்களின் சாரதி உயிரிழந்துள்ளதாகவும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய முச்சக்கரவண்டிச் சாரதியான பெண்ணைக் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிள், கால்நடையொன்றில் மோதியதில், தூக்கி வீசப்பட்ட மோட்டார் சைக்களின் சாரதி, எதிரே வந்த முச்சக்கரவண்டியுடன் மோதி உயிரிழந்துள்ளார். 

இவ்விபத்தில் கல்கமுவ பகுதியைச் சேர்ந்த 22 வயதான நபரொருவரே  உயிரிழந்துள்ளார்.

ஹெரோய்னுடன் ஒருவர் கைது

பொரலஸ்கமுவ, பெல்லன்தொட பகுதியில் 16 கிராம் 800 மில்லிகிராம் ஹெரோய்ன் வைத்திருந்தவரை, திங்கட்கிழமை (30) மாலை 5.45 மணியளவில் பொரலஸ்கமுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். 

குறித்த சந்தேக நபர், கல்கிஸ்ஸை பகுதியைச் சேர்ந்தவர் என விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மதுபானம் தயாரித்தவர் கைது

சட்டவிரோத மதுபானத் தயாரிப்பில் ஈடுபட்ட 58 வயதானவரை, திங்கட்கிழமை (30) மாலை 2.30 மணியளவில் உதம்மட பகுதியில் வைத்து வியாங்கொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

குறித்த சுற்றிவளைப்பில் 1570 லீட்டர்  (10 பரல்) சட்டவிரோதமான முறையில் வடிக்கப்பட்ட கோடா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யானை தாக்கியதில் அதிகாரி பலி

சங்கிலிமலை காட்டுப் பகுதியில் யானை தாக்கியதில் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரியொருவர், திங்கட்கிழமை (30) உயிரிழந்துள்ளார். 

வாரியபொல பகுதியைச் சேர்ந்த 56 வயதானவரே இச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

மீன்பிடிக்கச் சென்றவர் சடலமாக மீட்பு

வெலிக்கந்த, திமுலான குளத்துக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) இரவு மீன்பிடிக்கச் சென்றவர், திங்கட்கிழமை (30) மதியம் 2.10 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  

வெலிக்கந்த பகுதியைச் சேர்ந்த 59 வயதான நாகந்தலலாஹே தொன் பிரேமதிலக என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .