2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தேசிய சகவாழ்வு முக்கிய கருப்பொருள்: அமைச்சர் மனோவிடம் அமெரிக்க தூதர் தெரிவிப்பு

Kanagaraj   / 2015 டிசெம்பர் 01 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் இனங்கள் மற்றும் மத, மொழிகள் மத்தியில் சகவாழ்வு என்பது அமெரிக்க அரசின் இலங்கை தொடர்பான கொள்கையில் மிக முக்கியமான ஒரு கருப்பொருள் ஆகும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதர் அதுல் கெசாப் தெரிவித்தார்.

தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசனுக்கும் இலங்கைக்கான அமெரிக்க தூதர் அதுல் கெசாபுக்கும் இடையில்  தேசியக் கலந்துரையாடல் அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றுள்ள கலந்துரையாடலிலேயே தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பில், அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தமிழ், சிங்கள மொழிகள் இரண்டு ஆட்சி மொழிகளாகவும், ஆங்கிலம் இணைப்பு மொழியாகவும் நடைமுறை ஆக்கப்படும் அதிகாரத்தையும், அதேபோல் சிங்கள, தமிழ், முஸ்லிம் இனங்கள் மத்தியிலான சகவாழ்வை உறுதிப்படுத்தும் அதிகாரத்தையும், கொண்டுள்ள தேசிய கலந்துரையாடல் அமைச்சை, ஒரு முக்கியமான ஒரு அமைச்சாக நாம் கருதுகிறோம். இந்த பின்னணியில் உங்கள் அமைச்சின் செயற்பாடுகளுக்கு அமெரிக்காவின் நல்லெண்ண ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று தூதுவர் அறிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் போது அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளதாவது,

சர்வதேச சமூகத்தின் நிகழ்ச்சி நிரலில் எனது அமைச்சு முக்கியமான ஒரு இடத்தை வகிப்பது எனக்கு தெரியும். நான் இந்த அமைச்சு பொறுப்பை ஏற்று தற்போது சுமார் இரண்டரை மாதங்களே ஆகியுள்ளன.  

தற்போதைய வரவு- செலவுத் திட்ட செயற்பாடுகள் முடிவடைந்த பின்னர் நமது அமைச்சின் புதிய திட்டங்களை நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்க நான்  திட்டமிட்டுளேன். கடந்த கால ஆட்சியில் இருந்திராத அரசியல் திடப்பாடு இன்றைய அரசில் இருக்கின்றது. இதன்மூலம் மொழியுரிமையையும், வாழ்வுரிமையும் இந்நாட்டில் படிப்படியாக நான்  உறுதிப்படுத்துவேன். இதற்கான தயாரிப்பு வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

எனது அமைச்சின் செயற்பாடுகளுக்கு சர்வதேச சமூகத்தின் உதவி, ஒத்தாசைகளை நான் நாடியுள்ளேன்.  இதற்கான உறுதிப்பாடுகள் தொடர்ச்சியாக  என்னை சந்தித்து வரும் தூதுவர்கள் மற்றும் சர்வதேசிய சமூக பிரதிநிதிகளால் வழங்கப்பட்டு வருகின்றன.

எனது அமைச்சின் திட்டங்கள் எவை என்பதுபற்றி இன்னமும் சில மாதங்களில் நாட்டு மக்கள், குறிப்பாக கடந்த காலங்களில் துன்பங்களை சந்தித்த மக்கள் நடைமுறையில் அறிந்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .