திருமணம் முடித்து இவ்விருவரும், கொழும்பு ஹோட்டல் ஒன்றில் தேனிலவு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, கடந்த 7ஆம் திகதி அதிகாலை...

"> Tamilmirror Online || கணவனின் தேனிலவை குழப்பிய மனைவி
X

X

கணவனின் தேனிலவை குழப்பிய மனைவி

திருமணம் முடித்து தேனிலவை கொண்டாடிக்கொண்டிருந்த போது குறுக்கிட்ட மனைவி, அந்த தேனிலவு கொண்டாட்டத்தையை குழப்பிய சம்பவமொன்று கொழும்பில் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

தனியார் நிறுவனமொன்றில் நிறைவேற்று தரத்தில் கடமையாற்றுகின்ற, திருமணம் முடித்து இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான ஒருவர், மற்றுமொரு தனியார் நிறுவனமொன்றில் பணிப்பாளர் தரத்தில் கடமையாற்றும் 24 வயதான யுவதியை கரம்பிடித்துள்ளார்.

திருமணம் முடித்து இவ்விருவரும், கொழும்பிலுள்ள  ஹோட்டல் ஒன்றில் தேனிலவு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த போது, கடந்த 7ஆம் திகதி அதிகாலை, முதல் மனைவி இன்னும் சிலருடன் இணைந்து அந்த ஹோட்டலுக்குள் புகுந்து அட்டகாசம் செய்துள்ளார்.

ஹோட்டல் மேல் மாடியில் மிகவும் ஆடம்பரமாக நடத்தப்பட்ட திருமணத்தில்,  தான் கரம்பிடித்தது இரண்டு குழந்தைகளின் தந்தையொருவர் என்பது, அவருடைய முதல் மனைவி,ஹோட்டலுக்கு வந்து பிரச்சினையை ஏற்படுத்திய போதாகும் என்று புது மனைவி தெரிவித்துள்ளார்.

முதல் மனைவி கொழும்பில் ஆள்நடமாட்டங்கள் அதிகமுள்ள பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் கணக்காளராக கடமையாற்றுகின்றார்.

திருமண நாளன்று தனது இளம் மனைவிக்கு கணவனான அந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை, தங்க பெண்டனுடன் கூடிய சங்கிலி மற்றும் திருமணம் மோதிரம் ஆகியவற்றை அணிவித்துள்ளார். அவையிரண்டும் டுபாயில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

மணமகனின் தரப்பில் அவருடைய அம்மா மட்டுமே திருமண வைபவத்தில் பங்கேற்றிருந்ததாவும் அவரும், மணமகனால் (புதுமாப்பிள்ளை) கூலிக்கு அமர்த்தப்பட்டவர் என்றும் அறியமுடிகின்றது.

திருமணம் நடைபெற்ற அந்த ஹோட்டலுக்கு 7 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டதாகவும்  அத்தொகையும் மணப்பெண் தரப்பில் செலவிடப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று
பொலிஸார் அறிவித்தனர்.

திருமண நாளன்று, புதுமாப்பிளை தன்னுடைய மனைவியிடம், தான் கடமையாற்றும் நிறுவனத்தில் யுவதியொருவருக்கு திருமணம் என்றும் அதற்கு செல்வதாக கூறிவிட்டு, புது கோர்ட் சூட் அணிந்துகொண்டு புத்தம் புதிய காரில் தன்னந்தனியாக ஹோட்டலுக்கு ,அதுவும் விடியற்காலையிலேயே பயணித்துள்ளார்.

திருமணம் தொடர்பில் புதுமாப்பிள்ளையின் மனைவிக்கு அலைபேசியூடாக யாரோ ஒருவர் அறிவித்துவிட்டார். இதனையடுத்தே, தன்னுடைய உறவினர்களுடன் அந்த ஹோட்டல் அறையை சுற்றிவளைத்த முதல்மனைவி, இவ்விருவரையும் கையும்மெய்யுமாக பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

அதன் பின்னரே, தன்னுடைய 37வயதான கணவன், இரண்டு குழந்தைகளின் தந்தையெனவும் அவருக்கு 10 வயதில் மகள் இருப்பதாகவும் அவள், கொழும்பில் உள்ள பிரபல்யமான கல்லூரியில் பயில்வதுடன் இரண்டாவது மகனுக்கு 4 வயது என்று அறியமுடிந்ததாக புதுமனைவி, பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர், தனியார் நிறுவனமொன்றில் நிறைவேற்று தரத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த போது, புதிதாக வேலைத்தேடி, நிறுவனமொன்றுக்கு அழைப்பை ஏற்படுத்தியுள்ளார். அதன் பின்னரே அவ்விருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தததாகவும் அக்காதல் 3 வருடங்களாக நீடித்ததாகவும் விசாரணைகளிலிருந்து அறியமுடிகின்றது.


கணவனின் தேனிலவை குழப்பிய மனைவி

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.