மாக்ஸ்மன் விளையாட்டுக்கழகத்துக்கு நிதி உதவி
11-12-2015 11:25 AM
Comments - 0       Views - 28

-எஸ்.எம்.அறூஸ்

அட்டாளைச்சேனை மாக்ஸ்மன் விளையாட்டுக் கழகத்துக்கு  விளையாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர், தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டின் மூலம் ஐம்பதனாயிரம் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளதாக கழகத்தின் செயலாளர் ஆர்.நௌசாத் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சரிடம் மாக்ஸ்மன் விளையாட்டுக்கழக வீரர்கள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்கவே கழக வீரர்களுக்கு தேவையான விளையாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக மேற்படி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேற்படி நிதியை ஒதுக்கீடு செய்த கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம் நசீருக்கு கழக வீரர்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.

"மாக்ஸ்மன் விளையாட்டுக்கழகத்துக்கு நிதி உதவி" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty