2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

JAT நிறுவனத்தால் இலங்கையில் ஏரன் ஹொக்கி அறிமுகம்

Gopikrishna Kanagalingam   / 2015 டிசெம்பர் 17 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகப் புகழ்பெற்ற ஹேர்மன் மில்லர் கதிரைகள் மற்றும் மேசைகள் ஆகியவற்றை இலங்கையில் அறிமுகம் செய்து விநியோகிக்கும் JAT ஹோல்டிங்ஸ், தனது முதலாவது ஏரன் ஹொக்கி போட்டித் தொடரை இலங்கையில் முன்னெடுத்திருந்தது. இது, இலங்கையின் கூட்டாண்மை விளையாட்டுப் போட்டிகள் வரலாற்றில் முதற்தடவையாக இடம்பெற்றிருந்தது.

இந்த போட்டி நிகழ்வு, மருதானை, எக்ஸ்பேர்ட் சிட்டி பகுதியில் அண்மையில் இடம்பெற்றது. இதில், புகழ்பெற்ற வியாபார நிறுவனங்கள் பதின்நான்கின் அணிகள் பங்கேற்றிருந்தன. அந்த அணிகளில், மில்லேனியம் IT (MIT), HSBC,  HDPL, பிலிப் வீரசிங்க அசோசியேட்ஸ் (PWA), முராட் இஸ்மயில் - சன்ன தசவத்த அசோசியேட்ஸ் (MICDA), யங் ஆர்கிடெக்ட்ஸ் ஃபோரம் (YAF), சுரத் விக்ரமசிங்க அசோசியேட்ஸ் (SWA), டயலொக், பிரிட்டிஷ் கவுன்சில், ஹேலீஸ், DHL மற்றும் வேர்டூஸா ஆகியன உள்ளடங்கியிருந்தன.

ஏரன் ஹொக்கி என்பது, 'அலுவலக ஹொக்கி” விளையாட்டில் மற்றுமொரு சாதனை அம்சமாக அமைந்துள்ளது. இந்த விளையாட்டுக்காக விசேடமாக நிர்மாணிக்கப்பட்ட உள்ளக விளையாட்டுத் திடலில், இந்தப் போட்டிகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. ஓர் அணியில் ஐவர் உள்ளடங்கியிருந்தனர். ஐஸ் ஹொக்கி விளையாட்டில் பயன்படுத்தப்படும் ஹொக்கி ஸ்டிக்களுக்கு ஒப்பான ஹொக்கி ஸ்டிக்குகள் பயன்படுத்தப்பட்டிருந்தன.

விறுவிறுப்பாக இடம்பெற்றிருந்த போட்டிகளைத் தொடர்ந்து, DHL அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்திருந்தது. முதல் பரிசுக்காக ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான 5 ஏரன் கதிரைகள் வழங்கப்பட்டிருந்ததுடன், சம்பியன் கிண்ணமும் பரிசாக வழங்கப்பட்டிருந்தது. பிலிப் வீரசிங்க அசோசியேட்ஸ் (PWA) அணி இரண்டாமிடத்தையும், பிரிட்டிஷ் கவுன்சில் மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டன.

ஒவ்வொரு ஏரன் கதிரைகளின் மூலமாகவும் அதிகளவு சொகுசு மற்றும் சௌகர்யம் போன்றன உறுதி செய்யப்படுகின்றன. புத்தாக்கமான, காற்றோட்டமான மற்றும் woven suspension membrane ஆகிய அம்சங்கள் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள இந்த கதிரைகள், அமர்பவர்களுக்கு அதிகளவு சௌகர்யத்தை வழங்கும் வகையில் அமைந்துள்ளன. கதிரைகளில் அமர்பவர்களின் உடல் எடை சமமாக கதிரையில் பதியும் கட்டமைப்பின் மூலமாக, அழுத்தம் பிரயோகிக்கப்படுவது தவிர்க்கப்படுகிறது. வெப்பம் ஏற்படுவதும் தவிர்க்கப்படுகிறது. அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தினசரி எதிர்கொள்ளக்கூடிய தசை, எலும்பு மற்றும் இடை போன்றவற்றில் பிடிப்புகள், முறிவுகள் போன்றன தவிர்க்கப்படுகின்றன. ரோல்ஸ் ரொயிஸ் அலுவலகக் கதிரைகள் வடிவமைப்பில் பயன்படுத்தப்படும் உயர் விஞ்ஞான பொறிமுறைகள் இந்த ஏரன் கதிரைகளின் வடிவமைப்பிலும் பிரயோகிக்கப்பட்டுள்ளன.

JAT 1993 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது முதல், தொடர்ச்சியான நவீன, புதிய ஆக்கம் மற்றும் சாதனை தீர்வுகளை இத்துறையில் JAT வழங்கி வந்துள்ளது. உலகப்புகழ்பெற்ற வர்த்தக நாமங்களான இத்தாலியின் Sayerlack மரவேலை பொலிவூட்டுதல் மற்றும் பிரித்தானியாவிலிருந்து Permoglaze அலங்கார இமல்ஷன் மற்றும் வெதர் கோட் பெயின்ட் வகைகள் மற்றும் அமெரிக்காவிலிருந்து ஹேர்மன் மில்லர் ஆகிய தெரிவுகளையும் இறக்குமதி செய்து விநியோகித்து வருகிறது. இலங்கையில் காணப்படும் சிறந்த 10 பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் ஒன்றாக JAT ஹோல்டிங்ஸ் திகழ்கிறது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .