லக்ஸிடமிருந்து சிறந்த நறுமணம்
17-12-2015 08:21 PM
Comments - 0       Views - 219

பெண்மையையும் அற்புத நறுமணங்களின் நீடித்த வலிமையினையும் கொண்டாடும் முகமாக, அழகுராணிகள், சினிமா நட்சத்திரங்கள், மொடல்கள், கூட்டாண்மை மற்றும் உயர்மட்ட சமூக நிறுவனங்களைச் சேர்ந்தோர் பலரின் பங்குபற்றலோடு ஒரு ஒன்று கூடல் நிகழ்வொன்றினை இம்மாதம் 16 ஆம் திகதியன்று ஏற்பாடு செய்திருந்தது லக்ஸ். ஆடம்பரமான அற்புத நறுமணங்களை பெண்கள் அனுபவிக்கும் வகையில் புரட்சிகரமான மாற்றத்தினை மீண்டும் லக்ஸ் ஏற்படுத்தியுள்ளது. 

LUX Soft Touch மற்றும் LUX Silk Sensation ஆகிய இரண்டு சவர்க்காரங்களிலும் உள்ள தனித்துவத்தன்மை யாதெனில் அவையிரண்டுமே ஹவுஸ் ஒப் பேர்ம்னிச்சைச் சேர்ந்த பிரதம வாசனைத்திரவிய நிபுணர் மார்டின் கோஹ் மற்றும் ஸ்டீபானஸ் அகுங்க் நுக்ரோஹோ ஆகியோரால் உருவாக்கப்பட்டிருப்பதுதான்.  

லக்ஸானது சிறப்பானதும்  அற்புதமானதுமான பெண்களை கௌரவித்தும் கொண்டாடியும் வந்திருக்கின்றது.  அதுதான் 16 ஆம் திகதியன்றும் நிகழ்ந்தது! அற்புத நறுமணங்கள் அதியுன்னதமாக புலன்களுக்கு விருந்தளித்த  இந்நிகழ்வில் இவ்விரு சவர்க்காரங்களும் மீள அறிமுகம் செய்து வைக்கப்பட்டதோடு இதுவரை காலமும் இலங்கையர்கள் அனுபவித்திராத ஒருவித புதிய அனுபவத்தினையும் தந்திருந்தது. 

ஆவலைத் தூண்டும் அற்புத வாசனைகளையே தமது அடையாளமாகக் கொண்ட LUX Soft Touch மற்றும் LUX Silk Sensation பெண்களை வசீகரிப்பதோடு மட்டுமன்றி  உற்சாகமளிப்பதாகவும் அமைகின்றது. 

அன்றைய நிகழ்வுக்கு வருகை தந்த அதிதிகள் வின்டேஜ் பிரெஞ்ச் ரோஸ் அறையினூடாக சென்று அற்புத நறுமணத்தினை அனுபவித்தவாறே லக்ஸின் தனித்துவ அடையாளமான மனதை மயக்கும் வாசனையையும் அடையாளம் கண்டனர். இதன்போது ரோஜா சுவர் பின்னணியில் விருந்தினர்கள் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளும் வாய்ப்புகளும் வழங்கப்பட்டன. இது  ரோஜாப் பூக்கள் நிறைந்த உலகினுள் நுழைவது போன்ற பிரமையை பார்வையாளர்களிடத்தில் ஏற்படுத்தியது. அன்றைய தினம் அதிதிகளாகக் கலந்து கொண்டோருக்கு அது என்றென்றும் நினைவில் கொள்ளும் ஒரு அற்புத நிகழ்வாய் அமைந்திருந்தது. பலே நடனம், அங்கு இசைக்கப்பட்ட மென்மையான பாரம்பரிய இசை என்பன ஆடம்பரம், அற்புத நறுமணம் மற்றும் காதல் எனும் தொனிப்பொருள்களுக்கு கச்சிதமாகப் பொருந்துவதாய் அமைந்திருந்தன.   

இலங்கையின் முன்னணி மொடல்களான இந்தீவாரி மற்றும்  சமானி ஆகியோரின் லக்ஸின் நறுமணத்தினால் தூண்டப்பட்ட மொடல் அணிவகுப்பானது அன்றைய நிகழ்வுக்கு மேலும் உயிர் கொடுப்பதாய் அமைந்திருந்தது. 

பிரெஞ்ச் ரோஜாக்களைப் பிரதிபலிக்கும் கேக்குகள் மற்றும் குடிபானங்கள் என்பனவும் அன்றைய அந்திநேரப் பொழுதின் மந்திர உணர்வுக்கு மேலும் வலுச்சேர்ப்பதாய் அமைந்திருந்தது.

அங்கு கலந்து கொண்ட  பிரபலங்களில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்ர, ரோஸி சேனநாயக்க, சிகையலங்கார நிபுணரும் அழகுக் கலை விற்றபன்னருமான ரமணி பெர்ணான்டோ, ஆடை வடிவமைப்பாளர்களான யோலண்டா அலுவிஹார, தர்ஸி கீர்த்திசேன, திரை நட்சத்திரங்கள், நதீஷா ஹேமமாலி, சசினி அயேந்திரா, சாரங்க மற்றும் உமாலி அழகுராணி ஸ்டெபானி சிரிவர்தன, பாடகர்களான பாத்தியா, சந்தூஷ் மற்றும் துஷ்யந்த் வீரமான்  என்று பட்டியல் நீண்டு செல்கின்றது. அவர்கள் எல்லோருமே எப்போதும் நீடித்து நிலைக்கும் அழகுச் சின்னம் லக்ஸ்தான் என்பதில் ஏகோபித்த கருத்துடையவர்கள். 

'தற்போது அற்புத நறுமணங்கள் என்றால் ரோஜாக்களே முக்கிய இடம் வகிக்கின்றன- அதனாலேயே சவர்க்காரத் தயாரிப்பில் அவை  பிரதான இடம் வகிக்கின்றன' என்றார் ரமணி பெர்ணான்டோ.  'முன்னைய தசாப்தங்களைப் போலல்லாமல் தற்போது அற்புத வாசனையென்பது வெறுமனே போத்தலுக்குள் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. சிறிதளவில் ஆங்காங்கே தெளிக்காமல் அற்புத நறுமணத்தில் நீங்கள் உங்களையே ஆழ்த்துவதற்கான சந்தர்ப்பத்தினை லக்ஸ் வழங்குகின்றது' என்றார் யுனிலிவரின் சந்தைப்படுத்தல் முகாமையாளர் ஷர்மிளா பண்டார. 'லக்ஸில் உலகின் தலைசிறந்த வாசனைத் திரவியங்களைக் கொண்டு உங்களுக்கான அழகு விருந்தினை நாங்கள் படைக்கின்றோம். ஒவ்வோர் லக்ஸ் குளியலின் போதும் பெண்  தனது பெண்மையைக் கொண்டாடியவளாய் தன்னை அற்புதமானவளாய் உணரச் செய்வதே எங்களது இலக்கு என்றார் அவர். 

'இவ்விரு சவர்க்காரங்களுமே தனித்துவமானவை என்றுமே மறக்கப்பட முடியாதவை விற்பனையில் உச்சத்தினைத் தொடுபவை.  இச் சவர்க்காரங்களின் பிரதான அம்சமே அற்புத நறுமணம் என்பதனால் அவை வாடிக்கையாளர் மனங்களில் என்றும் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை' என்றார் லக்ஸ் வர்த்தக நாம முகாமையாளர் ஆன்யா டல்படாடோ.

"லக்ஸிடமிருந்து சிறந்த நறுமணம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty