மருத்துவ மகத்துவம்: முப்பத்தொன்பதில் முதல் ஒலி
23-12-2015 09:15 AM
Comments - 0       Views - 2236

பிள்ளைகளின் மழலை மொழிக்காய் காத்திருந்து முதல் சொல் கேட்கின்ற போது பெற்றோரிடத்தில், எழுகின்ற ஆனந்தம் எழுத்துக்குள் அடங்காது. ஒவ்வொரு குழந்தையும் ஒலி எழுப்புவதற்கும் கேட்பதற்குமான வயதெல்லை பெரியளவில் வேறுபடுவதில்லை.

பிறப்பிலேயே பார்வை மற்றும் கேட்டல், பரம்பரை குறைபாட்டு நோயினால் பீடிக்கப்பட்டிருந்த ஜொயானி மில்னி, தன்னுடைய 20ஆவது வயதில் முற்றாக பார்வையை இழந்தார்.

அவரது செவியிலே மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் பின்னர் 39ஆவது வயதில் முதன்முதலில் ஒலியையும், சிறுவயதிலிருந்து அவருடைய தாயார் சேமித்து வைத்திருந்த, அவருடைய மழலைக்குரல் பதிவுகளையும் கேட்டு பூரிப்படைந்தார்.

Dr.கார்த்திகேசு கார்த்தீபன்
விரிவுரையாளர்
சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீடம்
கிழக்கு பல்கலைக்கழகம்   

"மருத்துவ மகத்துவம்: முப்பத்தொன்பதில் முதல் ஒலி" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty