ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஒரு தடை நீக்கம்
23-12-2015 10:35 AM
Comments - 0       Views - 608

அமெரிக்காவில் ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் ஆண்கள் இரத்த தானம் வழங்கக்கூடாது என்று விதிக்கப்பட்டிருந்த தடை, 30 ஆண்டுகளுக்குப் பிறகு நீக்கப்பட்டுள்ளது.

எனவே, ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் ஆண்கள், இனி இரத்ததானம் வழங்கலாம் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும், இவ்வாறானவர்கள் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு, 12 மாதங்களுக்குப் பின்னர்தான் இரத்ததானம் வழங்க முடியும் என்று, அமெரிக்க அரசின் உணவு மற்றும் மருந்துக் கட்டுப்பாட்டு துறை தெரிவித்துள்ளது.

எச்ஐவி தொற்றுக்களைத் தடுக்க, பல நவீன வழிகள் வந்துள்ளதைத் தொடர்ந்து, இந்தத் தடை உத்தரவு தேவையில்லை என்ற ஆய்வாளர்களின் கருத்தை ஏற்று, இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், இந்த உத்தரவும் பாரபட்சமானதே என்று, ஓரினச்சேர்க்கை உரிமை ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

'இது கேலிக்கூத்தானது. திருமணமான, ஒரே நபருடன் குடித்தனம் செய்யும் ஒரு ஓரினச்சேர்க்கையாளர், இரத்ததானம் செய்யக் கூடாது. அதேசமயம், பல பெண்களுடன் தொடர்புகளை வைத்துக் கொள்ளும் ஆண் தர முடியும் என்பது நியாயமற்றது' என்று ஓரினச்சேர்க்கையாளர்களுக்காக குரல் கொடுத்து வரும் ஜனநாயகக் கட்சி எம்.பி ஒருவர் கூறியுள்ளார்.

ஏற்கெனவே இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளிலும் இதேபோல இவ்வாறானவர்கள் கடைசியாக ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டு  12 மாதங்களுக்குப் பிறகு இரத்ததானம் செய்யலாம் என்ற நடைமுறை உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

"ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஒரு தடை நீக்கம் " இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty