கலை விழா
24-12-2015 11:40 AM
Comments - 0       Views - 35

அஸ்லம் மௌலானா

மருதம் கலைக்கூடல் மன்றம் ஒழுங்கு செய்துள்ள விசேட கலை விழா, சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலய அரங்கில் நாளை வெள்ளிக்கிழமை (25) மாலை 6.00 மணி தொடக்கம் நடைபெறவுள்ளது.

மன்றத்தின் தலைவர் அஸ்வான் சக்காப் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம் சலீம் பிரதம அதிதியாகவும் அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஏ.எல் தௌபீக், கல்முனை பொலிஸ் நிலைய உதவிப் பொறுப்பதிகாரி எஸ்.எல் சம்சுதீன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வில், பாடசாலைக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்படம் பாலியல் துஷ்பிரயோகங்களை சித்தரிக்கும் நாடகம், தத்துவ பாடல்கள், சிறார்களின் நடனம் மற்றும் இனிய கலை, கலாசார நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

"கலை விழா" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty