மருந்தகத்தில் கையைவைத்து மறைந்திருந்தவர் மாட்டினார்
28-12-2015 09:00 AM
Comments - 0       Views - 160

32 வழக்குகளில் பிணையில் விடுக்கப்பட்டிருந்த சந்தேகநபரொருவர், பிலிமத்தலாவையில் உள்ள மருந்தகமொன்றை கொள்ளையடிக்கும் போது, கடுகண்ணாவை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சனிக்கிழமை இரவு ரோந்துச் சேவையில் ஈடுபட்டிருந்த பொலிஸார், சந்தேகத்துக்கு இடமான முறையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியை நோக்கிச் செல்கையில், அந்த முச்சக்கரவண்டியின் சாரதி, தப்பியோடிவிட்டார்.

மேற்கொண்ட தேடுதலில், முச்சக்கரவண்டியிலிருந்து, அலவாங்கு, சாவிகள் மூன்று மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அருகிலிருந்த மருந்தகத்தின் பூட்டுகள் திறக்கப்பட்டிருந்துள்ளன. இதனை அவதானித்த பொலிஸார், மருந்தகத்துக்குள் நுழைந்து சோதனைக்கு உட்படுத்திபோதே, அந்த மருந்தகத்துக்குள் மறைந்திருந்த ஒருவர் கைதுசெய்யப்பட்டார்.

சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணைகளில், அந்த முச்சக்கரவண்டி, கொழும்பு காலி முகத்திடலில் அதேதினத்தன்று திருடப்பட்டதாகவும், தனக்கு எதிராக 32 வழக்குகள் உள்ளதாகவும் அவர், தெரிவித்துள்ளார்.

"மருந்தகத்தில் கையைவைத்து மறைந்திருந்தவர் மாட்டினார்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty