கதிர்காம யாத்திரிகர்களிடம் பகற்கொள்ளை
28-12-2015 09:05 AM
Comments - 0       Views - 122

கதிர்காமம் செல்லும் யாத்திரிகர்களுக்கு, அதிகூடிய விலையில் உணவுகள் விற்பனை செய்தல் மற்றும் தங்குமிடங்களுக்காக அதிக பணம் வசூலித்தல் போன்ற நடவடிக்கைகள், பொலிஸாரின் தலையீட்டுடன் நிறுத்தப்பட்டுள்ளதாக, கதிர்காம ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே டீ.பி.குமாரகே தெரிவித்தார்.

கடந்த வியாழக்கிழமை முதல் தொடர்ந்த நீண்ட வார இறுதி விடுமுறையையிட்டு, கதிர்காமத்துக்குச் செல்லும் யாத்திரிகர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தது. இந்நிலையில், அவர்களுக்கு விற்பனை செய்வதற்காக, வீதியோரக் கடைகள் பலவும் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றில் விற்பனை செய்யப்படும் உணவுகளின் விலைகள் அதிகமாகக் காணப்பட்டதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டை அடுத்து அங்கு விரைந்த
பொலிஸார், வர்த்தகர்களை கடுமையாக

எச்சரித்துள்ளனர். இதேவேளை, யாத்திரிகர்களுக்கு அதிக விலைக்குத் தங்குமிடங்களை வழங்கும் விடுதி உரிமையாளர்களையும், பொலிஸார் ஊடாகக் கடுமையாக எச்சரித்ததாக, பஸ்நாயக்க நிலமே மேலும் கூறினார்.

"கதிர்காம யாத்திரிகர்களிடம் பகற்கொள்ளை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty