ஊரெழு றோயல் அபார வெற்றி
25-12-2015 08:40 PM
Comments - 0       Views - 76

வடமாகாண ரீதியாக,  யாழ்பாணம், வலிகாமம், தீவகம், வடமராட்சி, பருத்தித்துறை, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் கால்பந்தாட்ட லீக்குகளின் அனுசரணையோடு வடக்கின் சமர் கால்பந்தாட்டத் தொடரை ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகம் உரும்பிராய் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடாத்தி வருகிறது.

இதில், ஊரெழு றோயல் விளையாட்டுக் கழகத்துக்கும் மயிலங்காடு பைவ் ஸ்டார் விளையாட்டுக் கழகத்துக்குமிடையிலான இரண்டாவது சுற்றுப் போட்டியில், றோயல் விளையாட்டுக் கழகம், 6-1 என்ற கோல் கணக்கில் கோல் மழை புரிந்து வெற்றி பெற்றது. இதில், றோயலின் நட்சத்திர வீரர் கஜகோபன், ஹட்ரிக் கோல் உள்ளடங்கலாக நான்கு கோல்களைப் பெற்றார்.

இதேவேளை, இத்தொடரின் முதல் சுற்றுப் போட்டிகளில், விக்கினேஸ்வரா, ஞானமுருகன், வளர்மதி, மெலிஞ்சிமுனை இருதயராஜா, றேஞ்சர்ஸ், திருக்குமரன், பைவ் ஸ்டார், யங்கம்பன்ஸ், நாமகள், விண்மீன், செந்நீக்லஸ், ஊரெழு பாரதி, ஹென்றிஸ், கலைவாணி, ஆனை யூனியன் ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

 

"ஊரெழு றோயல் அபார வெற்றி" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty