மோட்டார் சைக்கிள் செலுத்திய கான்ஸ்டபிளுக்கு எதிராக வழக்கு
29-12-2015 09:12 AM
Comments - 0       Views - 165

சாரதி அனுமதிப்பத்திரம், காப்பீட்டுச் சான்றிதழ் மற்றும் வாகன அனுமதிப்பத்திரமின்றி மோட்டார் சைக்கிளை செலுத்தியதாக கூறப்படும் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதி பொலிஸ் மா அதிபர் காரியாலத்தில் கடமையாற்றி வரும் மேற்படி பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு எதிராகவே வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.

இவர், மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றபோது ஆடைத் தொழிற்சாலைக்குச் சொந்தமான பஸ்ஸுடன் மோதுண்டுள்ளார்.   இச்சம்பவம் தொடர்பில் முறைப்பாட்டை பதிவுசெய்ய வந்த போக்குவரத்து பொலிஸாருடன் சுமார் ஒரு மணித்தியாலமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அதன் பின்னரே முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டதாகவும் முறைப்பாட்டின் போது மேற்படி பொலிஸ் கான்ஸ்டபிளிடம் உரிய மோட்டார் சைக்கிளை செலுத்துவதற்குரிய ஆவணங்கள் எதுவும் இருக்கவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

"மோட்டார் சைக்கிள் செலுத்திய கான்ஸ்டபிளுக்கு எதிராக வழக்கு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty