தெற்கு புற்றுநோய் வைத்தியசாலைக்கு உதவும் Walk.Unite.Heal நடை

கடந்த 2011ஆம் ஆண்டில் இலங்கையின் 2ஆவது விசேட புற்றுநோய் வைத்தியசாலையை யாழ்.நகரில் நிர்மாணிப்பதற்காக,  2.2 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியைச் சேகரித்த இலங்கையின் மிகப்பெரிய நிதி அறக்கட்டளை செயற்றிட்டமான TRAIL மீண்டும் 'Walk. Unite.Heal' (நடப்போம், ஒன்றிiணைவோம், குணமாக்குவோம்) நடைபவனியை முன்னெடுப்பது தொடர்பில் அண்மையில் அறிவித்திருந்தது.

இதற்கமைய, 2016ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நாட்டின் தென் பகுதியில் 5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வைத்தியசாலையை நிர்மாணித்தல் எனும் புதிய குறிக்கோளுடன் நடைபவனி ஒன்றை முன்னெடுக்கவுள்ளது.

இந்த அறிவிப்பானது,  அண்மையில் பார்க் ஸ்ட்ரீட் மியூஸ் Warehouse D இல் The Colours of Courage Trust (புற்றுநோய்க்கு எதிராக செயற்படும் Trail மற்றும் ஏனைய தேசிய செயற்றிட்டங்களுக்கு ஆதரவளிக்கும் அறக்கட்டளை) மூலம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த வெளியீட்டு நிகழ்வில் Trail அமைப்பின் ஸ்தாபகர்களான நாதன் சிவகனநாதன் மற்றும் சரிந்த உனம்பூவே ஆகியோரினால் அறிவிக்கப்பட்டது.

2016ஆம் ஆண்டுக்கான Trail நடைபவனியில் பங்கேற்பவர்கள் தமது பயணத்தை பருத்தித்துறையில் ஆரம்பித்து 28 நாட்களுக்குள்,  நாளொன்றுக்கு சுமார் 23 கிலோ மீற்றர் வீதம் தெய்வேந்திரமுனை நோக்கி பயணிக்கவுள்ளனர்.

இதில் பங்கேற்பவர்கள் தத்தமது திறனுக்கேற்ப ஒருநாள், 3 நாட்கள், முழுமையாகவோ அல்லது மெய்நிகர் பயணிகளாகவோ பங்கேற்க முடியும். 2016ஆம் ஆண்டில் இடம்பெறவுள்ள Trail தொடர்பான பதிவு விவரங்கள் மற்றும் நிதி அல்லது நன்கொடைகள் குறித்து இந்நிறுவனத்தின் புதிதாக புதுப்பிக்கப்பட்ட www.trailsl.com எனும் இணையத்தளம் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.

இந்நிகழ்வில் கடந்த 2011 நடைபவனியை முழுமையாக பூர்த்தி செய்த ஆண்கள் மற்றும் பெண்கள் அடங்கிய 12 Trail Blazers ஆகியோரின் பங்கேற்பு மற்றும் அங்கிகாரம் கிடைத்திருந்தது. Trail இன் உள்நாட்டு மற்றும் சர்வதேச பிரபல தூதர்களான குமார் மற்றும் மஹேல ஆகியோருக்கு மேலதிகமாக ஜக்குலின் பெர்னாண்டஸ், ஒடாரா குணவர்தன, யுரேனி
நொஷிகா மற்றும் நட்டாலி மற்றும் நதியா அன்டர்சன் (Amazing Race and Survivor புகழ் ஐக்கிய அமெரிக்காவில் இடம்பெறவுள்ள Trail I பிரதிநிதித்துவம் செய்யவுள்ளோர்) ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இந்த அறிமுக நிகழ்வில்,  முதலாவது Trail இன் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் கட்டி முடிக்கப்பட்ட வைத்தியசாலையின் படங்கள் அடங்கிய கண்காட்சி இடம்பெற்றிருந்தது. தெற்கிலிருந்து வடக்கு நோக்கி 670 கிலோ மீற்றர் தூர பயணத்தை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ 27 நாட்களுக்குள் நிறைவு செய்த சுமார் 30,000 மக்கள் மற்றும் 300,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்களின் கதைகளை விளக்குவதாக புகைப்படங்கள் அமைந்திருந்தன. அவர்களின் பங்கேற்பானது, புற்றுநோய்க்கு எதிரான ஒருமைப்பாடு மற்றும் 2009ஆம் ஆண்டு இலங்கையின் உள்நாட்டு போருக்கு பின்னரான தேசிய ஐக்கியத்தை வலியுறுத்துவதாக அமைந்திருந்தது.

 


தெற்கு புற்றுநோய் வைத்தியசாலைக்கு உதவும் Walk.Unite.Heal நடை

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.