விநியோகஸ்த்தர்களை கௌரவித்திருந்த களனி கேபிள்ஸ்
29-12-2015 09:49 AM
Comments - 0       Views - 35

களனி கேபிள்ஸ் தனது வருடாந்த விநியோகஸ்த்தர் ஒன்றுகூடல் நிகழ்வை, சிலாபம் அனந்தயா ஹோட்டலில் அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்வில், களனி கேபிள்ஸ் பிஎல்சி பிரதம நிறைவேற்று அதிகாரி மஹிந்த சரணபால, சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் அனில் முனசிங்க, பிரதம நிதிக் கட்டுப்பாட்டாளர் ஹேமமாலா கருணாசேகர மற்றும் சகல பிரிவுகளின் முகாமையாளர்களும் பங்குபற்றியிருந்தனர்.

நாடு முழுவதும் 2014ஆம் ஆண்டில் சிறப்பாக செயலாற்றியிருந்த விநியோகஸ்த்தர்களுக்கு இந்நிகழ்வில் விருதுகள், சான்றிதழ்கள் மற்றும் பணப்பரிசுகள் வழங்கப்பட்டிருந்தன.

சிறந்த விநியோகஸ்த்தர் (பெரிய, மத்திய மற்றும் நடுத்தர அளவு) ஆகியோர் இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டிருந்தனர். இந்நிகழ்வின் பிரதம அதிதியாக களனி கேபிள்ஸ் பிஎல்சி பிரதம நிறைவேற்று அதிகாரி மஹிந்த சரணபால பங்குபற்றியிருந்தார். அவர் களனி கேபிள்ஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான செயற்பாடு மற்றும் அதில் விநியோகஸ்த்தர்களின் பங்களிப்பு பற்றிய விளக்கங்களை வழங்கியிருந்தார்.

பிரதம நிறைவேற்று அதிகாரி கருத்து தெரிவிக்கையில், 'இதுபோன்ற விருதுகள் வழங்கும் நிகழ்வுகளின் மூலமாக விநியோகஸ்த்தர்களின் செயற்பாடுகள் கௌரவிக்கப்படுவது மட்டுமல்லாமல், ஊழியர்கள் மத்தியில் ஒற்றுமையை மேம்படுத்தும் வகையிலும் அமைந்திருக்கும். ஏனைய ஊழியர்களுக்கும் தமது சக ஊழியர்களின் செயற்பாடுகளை பாராட்டுவதற்கு வாய்ப்பு கிடைப்பதுடன், தம்மை சிறந்த நிலையில் பணியாற்றுவதற்கு ஊக்குவிப்பதாகவும் அமைந்துள்ளது' என்றார்.

பாரிய அளவு சிறந்த விநியோகஸ்த்தர் விருதை,
1. ஏ.கே. குணதிலக (மாவத்தகம)
2. விமல் பாலித (கம்பஹா)
3. பூர்ணா வீரசிங்க (களனி)
4. ஜூடித் தேவிகா (குளியாப்பிட்டி)
5. ஆர்.எம்.ஜி.பி. ரத்நாயக்க (குருநாகல்) ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

மத்தியளவு பிரிவில் வெற்றியாளர்களாக,
1. கேஅன்டி ஹோல்டிங்ஸ் (களனி)
2. எம்.எம்.எம். நஸார் (மட்டக்களப்பு)
3. ஜே.ஜே. விஜேரட்ன (மாத்தறை)
4. ஆர். டி. டிஸ்ரிபியுட்டர்ஸ் (நுவரெலியா)
5. ஏ.கே.ஐ.டி குணதிலக (அம்பலாங்கொட) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

சிறிய அளவு பிரிவில்,  
1. கே.எம்.என்.எஸ். குலதுங்க (மினுவங்கொட)
2. நலின் சின்தக (அக்குரெஸ்ஸ)
3. ஜே எல் டி சில்வா (மாத்தளை)
4. டி சி கே ஜயக்கொடி (புத்தளம்) மற்றும் கிஹான் பிரசாத் (பதுளை) ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

 

"விநியோகஸ்த்தர்களை கௌரவித்திருந்த களனி கேபிள்ஸ்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty