2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

அன்றாட உணவில் இறைச்சியின் தேவை யாது?

Gavitha   / 2015 டிசெம்பர் 29 , மு.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

அன்றாட புரதத் தேவையை நிவர்த்தி செய்து கொள்வதற்காக, மனிதன் மாமிச வகைகளை உட்கொண்டு வந்தான். ஆரம்ப காலத்தில் தம்மால் அல்லது தமது குழுவினரால் வேட்டையாடப்பட்ட மிருகங்களது மாமிசத்தை உட்கொண்டான்.

முன்னரைப் போன்று அனைவராலும் வேட்டையாடி தமக்குத் தேவையான மாமிசத்தைப் பெறுவது சிரமமான காரியமாக மாறியதால், வேட்டையாடுவது ஆபத்தான காரியம் என்பதனாலும் தொடர்ந்தும் வேட்டையாடுவதற்கு மிருகங்கள் கிடைக்கப் பெறாமையினாலும் பின்னர் அதனை சேமித்து வைத்துப் பயன்படுத்துவதற்காக அவற்றை பதப்படுத்தி களஞ்சியப்படுத்தவும் பழகினான்.

இவ்வாறு மனிதன் பதப்படுத்தல் செயற்பாடுகளுக்கும் களஞ்சியப்படுத்துவதற்கும் உணவு வகைகளை விநியோகம் செய்வதற்கும் படிப்படியாகப் பழகினான். அதுமட்டுமன்றி தனது வீட்டுத் தோட்டத்திலேயே உணவு வகைகளை பயிரிடும் பழக்கம் தொடங்கியது. இவ்வாறு மனிதன் விவசாயத் துறைக்கு தனது கவனத்தை செலுத்தினான். அது படிப்படியாக வர்த்தகமாக மாறி, தனித்தனித் துறைகளாக உருவெடுத்து வளர்ந்தமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறான வர்த்தகத் துறைகளில் ஒன்றாக மாமிச வர்த்தகம் உருவெடுத்தது. அதாவது, குறித்த தரப்பினர் வேட்டையாடி பெறும் மாமிசத்தை அதற்குரிய பெறுமதியை வழங்கி பெற்றுக்கொள்ளும் பழக்கம் உருவாகி, அது பிற்காலத்தில் கைத்தொழில் துறையாக உருவெடுத்தது.

இவ்வாறான வரலாற்று முக்கியத்துவத்துக்கு அப்பாற் சென்று மாமிச வகைகள் போசனையிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன. அதாவது, புரதச்சத்து அதிகளவில் மாமிசங்களிலேயே காணப்படுகின்றது. தசை மற்றும் என்புகளது வளர்ச்சி மற்றும் மீளுருவாக்கத்தில் புரதம் முக்கிய பங்காற்றுகின்றது. இது பல்வேறு அமினோ அமிலங்களின் சேர்க்கையாகும். மனித உடலினால் சுரக்க முடியாத 9 வகையான அமினோ அமிலங்கள் காணப்படுகின்றன. அந்தவகையான அமினோ அமிலங்களை நாம் உட்கொள்ளும் உணவிலிருந்தே பெற்றுக்கொள்ளப்படல் வேண்டும்.

முழுமையான புரதத்தைக்கொண்ட உணவு வகைகளில் இந்த அமினோ அமிலங்கள் காணப்படுகின்றன. முழுமையான புரதத்தை கொண்ட உணவு மாமிசமேயாகும். அனைத்து மாமிச வகைகளிலும் வெள்ளை மாமிசங்களில் அதாவது, மீன் வகைகள் உட்பட ஏனைய வளர்ப்புப் பிராணிகளின் வெள்ளை மாமிசங்களில் முக்கியமாக கோழி இறைச்சியில் அதிகளவில் காணப்படுகின்றன.

ஏனையவற்றுடன் ஒப்பிடுகையில், கோழி இறைச்சி கொழுப்புச் சத்து மிகவும் குறைந்த அதிக போஷாக்கினைக் கொண்ட மாமிசமாகும். புரதத்துக்கு மேலதிகமாக விட்டமின் ஏ, ஈ, கே மற்றும் பீ12 என்பவற்றையும் ‡போலேட் மற்றும் கனியுப்புக்களான கல்சியம், இரும்புச்சத்து, மக்னீசியம் மற்றும் செலனியம் என்பனவும் காணப்படுகின்றன. (தகவல் மூலம்: http://nutritiondata.self.com/facts/poultry-products/703/2)

அத்துடன், கோழி இறைச்சி நோயெதிர்ப்பு சக்தியை அதிகளவில் கொண்டதாகவும் காணப்படுகின்றது. இதனாலேயே காய்ச்சல் அல்லது தடிமல் ஏற்பட்ட வேளைகளில் கோழி இறைச்சி சுப் சாப்பிடுமாறு பணிக்கப்படுகிறார்கள். அதுமட்டுமன்றி விட்டமின் பீ6 உம் அதிகளவில் காணப்படுகின்றது.  இது மாரடைப்பிலிருந்து பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றுகின்றது.

விட்டமின் பீ6 ஆனது, மாரடைப்பினை ஏற்படுத்தத்தக்க ஹோமோசிஸ்டைன் அளவை குறைப்பதில் துணை புரிகின்றது, மேலும் இருதய நோய்கள் ஏற்படுவதற்கு காரணமான கொலஸ்டரோல் அளவைக் குறைக்கும் நியசினையும் கொண்டது. அமெரிக்க இருதய சங்கத்தின் பரிந்துரைக்கேற்ப கோழி இறைச்சியானது, சிவப்பு மாமிசங்களை விடவும் மிகவும் ஆரோக்கியமானதாகும். ஏனெனில், அவற்றில் மிகவும் குறைந்தளவிலான நிரம்பிய கொழுப்பு காணப்படுவதுடன், உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் ஏதுவான, இருதய நோய்கள் ஏற்படுவதை தடுக்கின்ற ஒமேகா 3 கொழுப்பமிலம் காணப்படுகின்றது. இவ்வாறான அனைத்து பிரதிபலன்கள் மற்றும் உடல் ஆரோக்கியத்தை காக்கும் கோழி இறைச்சி சந்தையில் மிகவும் இலகுவாக கிடைக்கத்தக்கதாகவும் காணப்படுகின்றது.

இன்றைய காலகட்டத்தில் முன்னைய காலங்களைப் போன்றல்லாது மிகவும் இலகுவான முறையில் கோழி இறைச்சியினை சந்தையில் பெற்றுக்கொள்ளக் கூடியதாகவுள்ளது. பறவையொன்றான கோழியின் மாமிசத்தை சிரமமின்றி உற்பத்தி மற்றும் பாதுகாத்து வைக்கவும் முடியும். அதே நேரம் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இன்றைய காலகட்டத்தில், மிகவும் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான முறையில் பொதி செய்யப்பட்டு, மென்மேலும் பாதுகாப்பான முறையில் பாதுகாத்து வைக்கத்தக்தாக எமது கரங்களை வந்தடைகின்றன.

இன்றைய காலகட்டத்தில் தமக்குத் தேவையான மாமிச வகைகளை சந்தையில் மிகவும் இலகுவாக கொள்வனவு செய்யக்கூடியதாக இருப்பதுடன் புதிய தொழில்நுட்ப முறைமைகளின் மூலம் மிகவும் பாதுகாப்பான முறையில் பொதி செய்யப்பட்டு மாமிச வகைகள் சந்தையை வந்தடைகின்றன.

இன்றைய சந்தையில் பல்வேறு வழங்குனர்கள் இருந்தாலும் ஒரு சில முக்கிய வழங்குனர்களுக்கு மட்டுமே கோழி இறைச்சி உற்பத்திகளுக்கு சர்வதேச தரச் சான்றிதழ்கள் கிடைக்கப் பெற்றிருக்கின்றன. ஒரு சிலர் மட்டுமே சர்வதேச தரத்திலான முறைகளைப் பயன்படுத்தி ஆரம்பம் முதல் இறுதி வரை, உணவு வழங்கலிருந்து பொதியிடல், போக்குவரத்து வரை அதாவது, மிகவும் ஆரோக்கியமான, சோளம், சோயா போன்றவற்றை குஞ்சுப் பருவத்திலிருந்து வழங்கி, அவற்றை 100மூ ஆரோக்கியமான சூழலில் வளர்த்தெடுத்து இறுதி வரை முறையாக பராமரிக்கின்றனர். பொதியிடலில் முக்கியமாக சர்வதேச அங்கிகாரம்பெற்ற விஷேட க்ரயோவெக் பொதியில் முற்றுமுழுதான குளிரூட்டப்பட்;ட சூழலில் களஞ்சியம் மற்றும் போக்குவரத்தை  மேற்கொண்டு, வாடிக்கையாளர்களுக்கு மிகவும் தூய்மையான, ஆரோக்கியமான கோழி இறைச்சியை வழங்குகின்றனர். க்ரிஸ்ப்ரோ சிக்கன் நிறுவனத்திர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

க்ரிஸ்ப்ரோ நிறுவனம், தெற்காசியாவிலேயே முதன்முறையாக மிகவும் ஆரோக்கியமான, சர்வதேச தரத்திலான க்ரயோவெக் பொதியிடல் முறைமையை கோழி இறைச்சி உற்பத்தித் துறைக்கு அறிமுகம் செய்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும். இது நிறையில் மாற்றத்தை ஏற்படுத்தாத, ஈரத்தன்மையற்ற, வாடிக்கையாளர்களின் பணத்துக்கு சிறந்த பெறுமதியை வழங்குகின்ற ஆரோக்கிமான பொதியிடல் முறையாகும். இந்த பொதியிடல் முறையின் ஊடாக கோழி இறைச்சியின் தூய்மை மிகவும் நீண்ட காலத்திற்கு பாதிப்புறாது பேணப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .