'அப்பே கம' அபிவிருத்தி செய்யப்படும்
29-12-2015 05:28 PM
Comments - 0       Views - 61

பத்தரமுல்லை ஜனகல கேந்திர நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள 'அப்பே கம' (எங்கள் கிராமம்), 300 மில்லியன் ரூபாய் செலவில் அடுத்த வருடம் அபிவிருத்தி செய்யப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

பாரம்பரிய கைத்தொழில்கள் செழித்திருக்க, மக்கள் எளிய முறையில் வாழ்ந்து திருப்தி கண்ட விவசாய - பொருளாதாரத்தால் நிர்வகிக்கப்பட்ட சமூகத்தைக்கொண்ட பண்டைய கால கிராமங்களின் பிரதிமையாக 'அப்பே கம' உள்ளது.

இலங்கையின் பாரம்பரிய கைத்தொழில், கலாசாரம் என்பவற்றை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு விளக்கும் நோக்கத்தில் 'அபே கம' 2005இல் நிறுவப்பட்டது. 

இதன் மூலம் இதுவரை 37 மில்லியன் ரூபாய் வருமானம் ஈட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

"'அப்பே கம' அபிவிருத்தி செய்யப்படும்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty