மரபுகள், உற்பத்திகளுக்கு மதிப்பளிக்கவும்: ஜனாதிபதி
29-12-2015 05:40 PM
Comments - 0       Views - 21

எமது மரபுகள் மற்றும் உற்பத்திப் பொருட்கள் ஆகியவற்றுக்கு நாம் மதிப்பளித்து, நாட்டில் அதற்கு உயர்வான பெறுமதியை வழங்கி, சர்வதேச சந்தையை வெற்றி கொண்டு உலகின் உன்னத நாடாக எமது நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, திங்கட்கிழமை (28) தெரிவித்தார்.

இலங்கை ஆயுர்வேத மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் புதிய தாவரச்சாறு உற்பத்திச்சாலையை பமுனுவ பிரதேசத்தில் திறந்து வைக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். 

எமது உற்பத்திப் பொருட்களுக்கு உரிய பெறுமதியை வழங்குவதற்கு கடந்த காலத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படாமையினால் விலைமதிக்க முடியாத எமது பொருட்கள் இன்னமும் மறைக்கப்பட்டுள்ளதாக அவர் இங்கு குறிப்பிட்டார்.

எமது அபிமானத்துக்குரிய கலாசாரத்துடன், எமது பொருட்கள் தொடர்பாக கதைக்கின்றபோது உள்நாட்டு மருத்துவ முறை மற்றும் ஆயுர்வேத மருத்துவம் என்பன முக்கிய இடத்தைப் பெறுவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, உள்நாட்டு மருத்துவ விஞ்ஞானம், ஆயுர்வேத மருத்துவம் என்பவற்றை முன்னோக்கிக்கொண்டு சென்று மென்மேலும் அவற்றை மக்களிடையே பரப்புவதற்கான அனைத்து உதவிகளையும் அரசாங்கம் வழங்கும் எனத் தெரிவித்தார்.

"மரபுகள், உற்பத்திகளுக்கு மதிப்பளிக்கவும்: ஜனாதிபதி" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty