யாழ்.ஆயருடன் சந்திப்பும் நூல்களின் வெளியீடும்
30-12-2015 12:19 PM
Comments - 0       Views - 48

-எம்.றொசாந்த்

யாழ். மறைமாவட்ட ஆயர் மேதகு கலாநிதி ஜஸ்ரின் பெணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையுடனான சந்திப்பும் ஊடகவியல் நூல்களின் வெளியீடும் யாழ். கத்தோலிக்க அச்சக பாதுகாவலன் மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை (29) மாலை நடைபெற்றது.

இச்சந்திப்பின் போது, அருள்திரு ரூபன் மரியாம்பிள்ளை அடிகளாரின் 'செய்தி நடத்துனர் பணியின் அடிப்படைகள்' என்ற 11 ஆவது ஊடகவியல் நூல் மற்றும் யாழ். ஆயருக்கு அர்ப்பணம் செய்யப்பட்ட 'நேரலைப் பத்திரிகையியல் ஓர் அறிமுகம்' என்ற 12 ஆவது ஊடகவியல் நூலும் வெளியிடப்பட்டன.

இந்நூல்களின் ஆசியுரைகளை யாழிலுள்ள தொலைக்காட்சியின் நிர்வாக இயக்குனர் எஸ்.எஸ்.குகநாதன், பத்திரிகை ஒன்றின் பிரதம ஆசிரியர் ம.வ.கானமயில்நாதன், யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் கலாநிதி பி.ஜே.ஜெபரட்ணம் அடிகளார் ஆகியோர் ஆற்றினர்.

வாழ்த்துரைகளை பண்டத்தரிப்பு பெண்கள் உயர் தரப் பாடசாலையின் பகுதித்தலைவர் எ.ஆர்.விஜயகுமார், யாழ். இலக்கிய வட்ட செயலாளர் நயினை கி.கிருபானந்தா, யாழ். பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி கந்தையா சிறிகணேசன் ஆகியோர் நிகழ்த்தினர்.

'செய்தி நடத்துனர் பணியின் அடிப்படைகள்' என்ற நூலுக்கான ஆய்வுரையை யாழ்.பல்கலைக்கழக ஊடக விரிவுரையாளர் கிருத்திகா தர்மராஜாவும் 'நேரலைப் பத்திரிகையியல் ஓர் அறிமுகம்' என்ற நூலுக்கான ஆய்வுரையை பத்திரிகை ஒன்றின் ஒன்றின் ஆசிரியர் ந.விஜயசுந்தரமும் நிகழ்த்தினர்.

இதன்போது, பாடசாலைகளுக்கு இடையில் நடைபெற்ற தேசிய மட்ட  நாடகப் போட்டியில், கீழ்ப்பிரிவில் முதலிடம் பெற்ற புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்களின் 'நிலை வாழ்வைத்தேடி' என்ற விவிலிய நாடகமும் இடம்பெற்றது.

" யாழ்.ஆயருடன் சந்திப்பும் நூல்களின் வெளியீடும்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty