அமைதி வேண்டி ஆராதனை
03-01-2016 09:54 AM
Comments - 0       Views - 67

-சொர்ணகுமார் சொரூபன்

சித்தங்கேணி குருமார் சந்நிதான வீணாகான குருபீடத்தின் ஏற்பாட்டில் ஓம் நமசிவாய சிவ ஆராதனையும் சிவ ஆன்மீக யாத்திரையும் நல்லூர் வீரகாளியம்மன் ஆலயத்தில் சனிக்கிழமை (2) இடம்பெற்றது.

யுத்தத்தால் பாதிப்படைந்த ஆலயங்களை புனரமைக்கவும் பூஜை வழிபாடுகள் அற்றிருக்கும் ஆலயங்களில் பூஜை வழிபாடுகளை ஆரம்பிக்க வேண்டியும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, இலங்கை - இந்திய மீனவர்களின் பிரச்சினை தீர்க்கப்படல், மீளளிக்கப்படாத காணிகள் மக்களிடம் மீளளிக்கப்படல், போதைப்பொருள் பாவனை முற்றாக ஒழிக்கப்பட வேண்டும், இளையவர்களின் வாழ்வு நெறிப்பட வேண்டும், காணாமற் போனோரின் உறவுகளுக்கு ஆறுதல் கிடைக்கவும் தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டும், தனிமனித அபிலாஷைகள் நிறைவேற வேண்டும் என்பவை சித்திக்க வேண்டி இந்த ஆராதனை நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது வேதாபராயணம், திருமுறை ஓதல், நிருத்தியாஞ்சலி, நாதஸ்வர, தவில் கச்சேரி, கீர்த்தனாஞ்சலி, பஜனை என்பன ஒவ்வொரு உபசாரமும் 108க்கும் அதிகமான கலைஞர்களைக் கொண்டு சமர்ப்பணம் செய்யப்பட்டது.

நல்லூர் வீரகாளியம்மன் ஆலயத்திலிருந்து புறப்பட்ட யாத்திரை, பருத்தித்துறை வீதி வழியாக வேம்படிச் சந்தியை அடைந்து ஆஸ்பத்திரி வீதி வழியாக சத்திரச் சந்தியூடாக வண்ணை வைத்தீஸ்வரர் ஆலயத்தை சென்றடைந்து நிறைவடைந்தது.

"அமைதி வேண்டி ஆராதனை" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty