ஆணுறை பயன்பாடு அதிகரிப்பு
06-01-2016 09:06 AM
Comments - 0       Views - 11732

1987ஆம் ஆண்டு முதல் கடந்த 20 வருட காலங்களில் நாட்டில் ஆணுறை பயன்பாடு 1.9 சதவீதத்திலிருந்து இலிருந்து 6 சதவீதமாக அதிகரித்துள்ளதாக  எய்ட்ஸ் தடுப்பு பிரிவின் வைத்திய பணிப்பாளர் டொக்டர் சிசிர லியனகே, நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

ஆணுறை பாவனை தொடர்பில் கடந்த 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின் பெறுபேறுகளின் அடிப்படையில், அதனை பயன்படுத்துவதற்கும் அதனை பெற்றுக்கொடுக்கவும் அவை தொடர்பிலான விழிப்புணர்வுகளை ஏற்படுத்துவுள்ளதாகவும் அவர் கூறினார்.

அத்துடன், தற்போதை முடிவுகளின்படி ஆணுறை பாவிப்பதை ஊக்குவிப்பது தொடர்பில் நேரடியாகவும் மறைமுகமாகவும் விளக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

"ஆணுறை பயன்பாடு அதிகரிப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty