வாழ்வியல் தரிசனம் 06/01/2016
06-01-2016 09:11 AM
Comments - 0       Views - 31

தியாகம் செய்வதே யோகம். ஏன் எனில் தியாகம் பிரதி பலனை எதிர்பார்த்து அமைவதில்லை. தங்கள் தியாகத்தின் மூலம் பிறர் பயன் பெறவேண்டுமென்பதே தியாகிகளின் எதிர்பார்ப்புமாகும். 

உண்மைத் தியாகிகளுக்கு நடிப்பு வராது. அரசியல் திருகு தாளங்களுக்கு இவர்கள் உடன்படுவதும் இல்லை. எவர்க்கும் இரங்குதலில் உண்மைத் தன்மைதான் மேலோங்கும். தன்னைத்தான் வாட்டுவது சாமானியமான காரியமும் அல்ல.

வாழ்க்கை எமக்கானது மட்டுமல்ல. உலக மக்களின் ஒரு சிறு புள்ளியாக இருந்த ஒருவன், மாபெரும் விஸ்வரூபியாக உலாவிடுவதற்குத் தியாகியால் தான் முடியும். தியாகிகள் காலத்தையே வரைகின்றார்கள். அதுவும் வியப்பூட்டும் வகையில்.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்

"வாழ்வியல் தரிசனம் 06/01/2016" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty