கதிர்காமத்தில் கடைகளை அகற்றுவதற்கு கடும் எதிர்ப்பு
07-01-2016 10:10 AM
Comments - 0       Views - 61

அனுமதியின்றி நடத்தப்பட்டு வந்த கடைகளை அகற்றுவதற்கு கதிர்காமம் நகரசபை எடுத்துள்ள தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பாதிக்கப்பட்ட கடைகளின் உரிமையாளர்கள், புதன்கிழமை (06) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமது ஜீவனோபாயத்தைக் கடந்த 20 வருடங்களாக கொண்டு சென்ற இடத்திலிருந்து எம்மை நீக்குவதானால் வியாபார நடவடிக்கைக்கு பொறுத்தமான ஓர் இடத்தினை அமைத்துத் தருமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரியிருந்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த, கதிர்காமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உபாலி காரியவசம், கதிர்காமம் கிரிவிகாரையின் தலைமை தேரர்  ஆகியோர், நகரசபை அதிகாரிகளுடன் தாம் கலந்துரையாடி உரியதொரு தீர்வினைப் பெற்றுத்தருவதாகவும் அதற்கு, இருநாட்கள் அவகாசம் தருமாறும் கேட்டிருந்தனர். அதன் பின்னரே ஆர்ப்பாட்டக்காரர்கள் குறித்த இடத்தினை விட்டு கலைந்து சென்றனர். 

"கதிர்காமத்தில் கடைகளை அகற்றுவதற்கு கடும் எதிர்ப்பு" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty