ஒபாமாவின் செல்ல நாயை கடத்த முயன்றவர் கைது
09-01-2016 10:46 PM
Comments - 0       Views - 194

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் செல்ல நாய்களில் ஒன்றை கடத்துவதற்கு திட்டம் தீட்டியதாகக் கூறப்படும் நபர் ஒருவர், தலைநகர் வொஷிங்டனில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஒபாமா குடும்பத்தின் செல்ல நாய்களான போ அல்லது சன்னி-யை கடத்திவருவதற்காக ஸ்கொட் ஸ்டோக்கெர்ட் என்ற அந்த நபர் தலைநகருக்கு பயணிப்பதாக புலனாய்வுப் பிரிவினர் தகவல் கிடைத்துள்ளது.

வொஷிங்டனில் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது குறித்த சந்தேகநபர்  கைதுசெய்யப்பட்டுள்ளார். அவரது வாகனத்திலிருந்து துப்பாக்கிகள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

"ஒபாமாவின் செல்ல நாயை கடத்த முயன்றவர் கைது" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)




Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty