உதவி அதிபர் மீது தாக்குதல்
11-01-2016 11:34 AM
Comments - 0       Views - 198

மாணவன் ஒருவனின் தாக்குதலில் படுகாயமடைந்த பாடசாலையொன்றின் உதவி அதிபர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நெஞ்சுப்பகுதியில் தாக்குதல்களுக்கு இலக்கான, அவர், காலி காராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

ஒழுக்காற்று நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான உதவி அதிபர் மீதே அந்த மாணவன், விக்கெட்டினால் தாக்கியுள்ளார் என்று அறியமுடிகின்றது.

தலைமுடியை வெட்டிக்கொண்டு வருமாறு அறிவுரை கூறிவிட்டு, காரியாலயத்தில் அமர்ந்திருந்து தன்னுடைய கடமைகளை செய்துக்கொண்டிருந்த போதே, அந்த மாணவன்,மேற்கண்டவாறு தாக்குதல் நடத்தியுள்ளார் என்று அறியமுடிகின்றது.

 

"உதவி அதிபர் மீது தாக்குதல்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty