ஆர்பிகோ வழங்கும் டெக்ஸி சேவை

ஆர்பிகோ விற்பனைத் தொடரில், பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக வரும் வாடிக்கையாளர்களுக்கு, டெக்ஸி சேவையை வழங்கும் விசேடத் திட்டமொன்றை, ஆர்பிகோ ஆரம்பித்துள்ளது.

இலங்கையிலுள்ள சுப்பர் மார்கெட்டுகளுள், ஆர்பிக்கோவே இந்தச் சேவையை முதல் முதலாக அறிமுகம் செய்துள்ளது.  இச்சேவையின் முதற்கட்டமாக ஹைட்பார்க் கோர்னர், தெஹிவளை, பத்தரமுல்ல மற்றும் வத்தளை ஆகிய நான்கு ஆர்பிகோ சுப்பர்சென்டர்களில்,  மின்சாரத்தில் இயங்கும் 10 Nissan Leaf கார்கள் வாடகைச் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Eco Privilege Taxi Service என்ற பெயரில் பிரத்தியேகமான ஆர்பிகோ வர்ணத்தில், சௌகரியமானதும் பாதுகாப்பானதும், சுற்றாடல் சாதகமானதுமான சவாரியானது, வீட்டுக்குச் செல்லும்  வாடிக்கையாளர்களுக்கு கிலோ மீற்றருக்கு 40 ரூபாய் என்ற அடிப்படையில் கட்டணத்தை அறவிடுவதாக கம்பனி அறிவித்துள்ளது.

'Arpico Super centres வழங்கி வரும் பல மேலதிக வசதிச் சேவைகள் காரணமாக, அவை ஏற்கெனவே தனித்துவமான சௌகரியங்களை அனுபவித்து வருகின்றன. இந்த புதியச் சேவையானது, வாடிக்கையாளர்கள் வரவேற்கும் மேலதிக வசதியாகும்' என்று Richard Peiris Distributors Ltd நிலையத்தின் சந்தைப்படுத்தல் முகாமையாளர், மினோத் டீ சில்வா தெரிவித்துள்ளார்.

ஆர்பிகோ விற்பனைத் தொடர் நிலையங்களில் தற்போது 17 ஆர்பிகோ சுப்பர் சென்ரர்கள், 18 காட்சி அறைகள், 21 நாளாந்த மினி சுப்பர் மார்க்கெட்டுகள் ஆகியன அடங்கியுள்ளன. கம்பனியின் முதன்மை விற்பனை நிலையங்களான ஆர்பிகோ சுப்பர்சென்டர்கள், வசதியான வாகனத் தரிப்பிடங்கள், சிட்டை கொடுப்பனவுகள், வங்கி வசதிகள், வாழ்க்கைத் தேவைகள், வீட்டு பாவனைப் பொருட்கள். மின்னியல் உபகரணங்கள் ஆகியவற்றிலிருந்து சமையலறைப் பொருட்கள், தளபாடங்கள் வரையிலான பொருட்களை உள்ளடக்கிய நாட்டில் மிகவும் சௌகரியமான பொருள் கொள்வனவு நிலையங்களாக விளங்குகின்றன.

 


ஆர்பிகோ வழங்கும் டெக்ஸி சேவை

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.