கொழும்பு சர்வதேச நிதி மையம் அங்குரார்ப்பணம்
20-01-2016 09:53 AM
Comments - 0       Views - 290

உத்தேசிக்கப்பட்டுள்ள கொழும்பு சர்வதேச நிதி மையம், ஏப்ரல் மாதத்தில் அங்குரார்ப்பணம் செய்யப்படும் என்று நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

நாட்டில் தற்போது செயற்பாட்டில் இல்லாத ஏழு சர்வதேச வங்கிகள்,  இந்த மையத்தில் தமது கிளைகளை நிறுவி செயற்பாடுகளை முன்னெடுக்க ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும் இவற்றில் மத்திய கிழக்கு, ஜப்பான் மற்றும் கொரியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த வங்கிகள் உள்ளடங்கியுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இவற்றுக்கு மேலதிகமாக 50 வங்கிகள் இந்த மையத்தில் தமது கிளைகளை அங்குரார்ப்பணம் செய்யத் திட்டமிட்டுள்ளதுடன், 37 உள்நாட்டு வங்கிகளும் தமது கிளைகளை அங்குரார்ப்பணம் செய்யவுள்ளன.

இந்த மையத்தில் நிறுவப்படவுள்ள வங்கிகளின் மூலமாக அனுமதிக்கட்டணத்தை அரசாங்கம் பெற்றுக் கொள்ளவுள்ளதுடன், இந்தப் பெறுமதி குறித்த விவரங்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

இந்த மையத்தின் மூலமாக நாட்டில் நிபுணத்துவம் வாய்ந்த மேலதிக தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்த முடியும் என்பதுடன், பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

"கொழும்பு சர்வதேச நிதி மையம் அங்குரார்ப்பணம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty