ஹாங்கோவர் இல்லாத மதுபானம்
21-01-2016 04:49 AM
Comments - 0       Views - 188

ஹாங்கோவர் இல்லாத மதுபானமொன்றைக் கண்டுபிடித்துள்ளதாக, வடகொரியா அறிவித்துள்ளது. அந்நாட்டு விஞ்ஞானிகளால் இது கண்டுபிடிக்கப்பட்டுள்ள அந்நாட்டின் அரச ஊடகம் அறிவித்தள்ளது.

மதுபானம் அருந்தியவர்கள், சில மணிநேரங்களின் பின்பு, உளவியல்ரீதியாகவும் உடலியல்ரீதியாகவும் ஏற்படும் விரும்பத்தகாத மாற்றங்கள், ஹாங்கோவர் என ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்றன.

இந்நிலையிலேயே, 30 தொடக்கம் 40 சதவீத அல்ககோல் அளவைக் கொண்ட இந்த மதுபானம், அவ்வாறான ஹாங்கோவர் விளைவுகளைத் தராது என அறிவிக்கப்படுகிறது.

ஹாங்கோவர் விளைவுகளைத் தராது என்பதைத் தவிர, மருத்துவ ரீதியாக இது அதிக பயனைத் தரவல்லது எனவும், அவ்வூடகம் தெரிவித்துள்ளது.

எனினும், கடந்த காலங்களில், நம்பமுடியாத மருத்துவக் கண்டுபிடிப்புகள் பற்றிய செய்திகளை, வடகொரியா வெளியிட்டு வந்தது. சில காலங்களுக்கு முன்னர், மெர்ஸ், சார்ஸ், எயிட்ஸ் ஆகியவற்றைக் குணப்படுத்தும் மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக அந்நாடு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

"ஹாங்கோவர் இல்லாத மதுபானம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty