கொலை, கொள்ளை, களவு...
21-01-2016 11:01 AM
Comments - 0       Views - 92

2014ஆம் ஆண்டு  மற்றும் 2015ஆம் ஆண்டு டிசெம்பர் மாதங்களில் மாத்திரம் மனித படுகொலை சம்பவங்கள் 74 பதிவாகியுள்ளதுடன் 181 கொள்ளை சம்பவங்களும் 408 திருட்டுச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் திணைக்கள ஊடகப்பிரிவு நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளது. 

கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் எந்தவொரு மனித படுகொலையும் இடம்பெறவில்லை என்றும், 2015ஆம் ஆண்டு இரண்டே இரண்டு படுகொலைகள் மட்டும் இடம்பெற்றுள்ளன என்றும் அப்பிரிவு தெரிவித்துள்ளது. 

2014ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் வரையிலான கொலை, கொள்ளை மற்றும் களவுச் சம்வங்களின் விவரங்கள்

குறித்த அறிக்கையில் அதிக கொள்ளைச் சம்வங்களுடன் தங்கல்லை பிரவு (08) காணப்படுகின்றது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், டிசெம்பர் மாதத்தில் மாத்திரம் மொத்தமாக இடம்பெற்ற 160 கொள்ளைச் சம்வங்களில் 107 வாகன கொள்ளைச் சம்பவங்கள் என்றும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

"கொலை, கொள்ளை, களவு..." இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty