பனியால் விலங்குகளுக்குக் கொண்டாட்டம்
24-01-2016 08:55 PM
Comments - 0       Views - 238

கடுமையான பனிப்பொழிவு காரணமாக, அமெரிக்காவின் பல மாகாணங்களில் பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற்பட்டுள்ள போதிலும், பல விலங்குகள், இவ்வானிலையை மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளன.

வொஷிங்டனிலுள்ள தேசிய மிருகக்காட்சிச் சாலை, அங்குள்ள விலங்குகள், இந்த வானிலையை மகிழ்ச்சியாகக் கொண்டாடும் புகைப்படங்களையும், காணொளியையும் வெளியிட்டுள்ளது.

இதில், பன்டா கரடியொன்று, பனியில் உருண்டு புரண்டு மகிழ்ச்சியுடன் விளையாடும் காணொளி, இணையத்தில் அதிக வரவேற்பைப் பெற்றது.

பன்டா கரடி தவிர, சிவப்புப் பன்டா, சிவப்பு வால் குரங்குகள், காட்டெருது, யானைகள், கடல் நாய் ஆகியன, பனியில் விளையாடும் புகைப்படங்களையும், அந்த மிருகக்காட்சிச் சாலை வெளியிட்டுள்ளது.

"பனியால் விலங்குகளுக்குக் கொண்டாட்டம்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty