ஈழத்தின் பொப்பிசைப் பாடலாசிரியர் கமலநாதன் காலமானார்
26-01-2016 08:43 AM
Comments - 0       Views - 203

ஈழத்தின் பிரபலமான  பொப்பிசைப் பாடல்கள் பலவற்றின் ஆசிரியரும் பிரபல கால்பந்தாட்ட மத்;தியஸ்தருமான எம்.எஸ் கமலநாதன், நேற்று  (25) திங்கட்கிழமை வடமராட்சி, வதிரியில் காலமானார்.

புகழ்பெற்ற பல பாடல்களை எழுதி, இசையமைத்த கமலநாதன், பல்வேறு விருதுகளைப் பெற்றதோடு, இலங்கையில் மாத்திரமன்றி, தமிழகத்திலும் மிகவும் பிரபல்யமாயிருந்ததும் குறிப்படத்தக்கது.

 யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான இவர், பாடசாலைப் பருவத்தில் கால்பந்தாட்ட, கிரிக்கெட் அணிகளில் இடம்பெற்றதோடு, அதன் பின்னர், பிரபல கால்பந்தாட்ட நடுவராகவும் இருந்துள்ளார்.

 எட்டுப் பிள்ளைகளின் தந்தையான இவரது இறுதிக் கிரியைகள், இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது.

 

"ஈழத்தின் பொப்பிசைப் பாடலாசிரியர் கமலநாதன் காலமானார்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty