சமூக சேவகர் மு.கதிர்காமநாதன் காலமானார்
02-02-2016 12:02 PM
Comments - 0       Views - 250

-வி.சுகிர்தகுமார்

கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் முன்னாள் தலைவராகக் கடமையாற்றிய சமூக சேவகரும் இலக்கிய ஆர்வலருமான மு.கதிர்காமநாதன், இன்று செவ்வாய்க்கிழமை (02) அதிகாலை காலமானார்.

கடந்த சில நாட்களாக சுகவீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இவர் இன்று காலமானார்.

இவர், அகில இலங்கை இந்து மா மன்றத்தின் கௌரவ பொதுச்செயலாளர், உலக சைவப்பேரவையின் செயலாளர் என பல பொறுப்புமிக்க பதவிகளை வகித்து தமிழ்ச் சமூகத்துக்கென அரிய பணிகளை ஆற்றியுள்ளார்.

இவரது இழப்பு, சைவத்துக்கும் தமிழுக்கு பேரிழப்பாகும் என ஆலையடிவேம்பு பிரதேச இந்து மா மன்றம் வெளியிட்டுள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"சமூக சேவகர் மு.கதிர்காமநாதன் காலமானார்" இந்த செய்திக்காக கிடைத்துள்ள கருத்துக்கள்... (0)
Leave a comment
Name :
Name is required
Email :
Email is required
Comment :
Comment cannot be empty