2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கல்பிட்டி பிரதேச பாடசாலைகளின் புதிய கட்டடங்கள் திறப்பு

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 02 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.என்.எம். ஹிஜாஸ்

கல்பிட்டி கோட்டக்கல்வி காரியாலயத்துக்குட்பட்ட மூன்று பாடசாலைகளின் புதிய வகுப்பறை கட்டடங்கள்,  வடமேல் மாகாண கல்வி, கலை மற்றும் கலாசார,விiயாட்டு மற்றும் இளைஞர் விவகார, தகவல் தொழில்நுட்ப அமைச்சர் சந்தியா எஸ்.குமார ராஜபக்ஸவினால் நேற்று திங்கட்கிழமை (01) திறந்து வைக்கப்பட்டன.

வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம். தாஹிரின் அழைப்பினை ஏற்று கல்பிட்டி பிரதேசத்துக்கு வருகை தந்த மாகாண அமைச்சர் சந்தியா எஸ்.குமார ராஜபக்ஸ தலவில், சென் அன்தனீஸ் சிங்கள மகா வித்தியாலயம், திகழி, அல் மதீனா ஆரம்ப பாடசாலை, கல்பிட்டி, ரெட்பானா. பெரிய சந்தி கிராம ஆரம்ப பாடசாலை ஆகியவற்றின் வகுப்பறை கட்டடங்களைத் திறந்து வைத்தார்.

இவ் வகுப்பறை கட்டடங்களுக்கென வடமேல் மாகாண சபையினால் சுமார் 10 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வுகளில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம். தாஹிர், மாகாண கல்விப் பணிப்பாளர் உட்பட கல்வித் திணைக்கள அதிகாரிகள், பாடசாலைகளின் அதிபர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, கல்பிட்டி கோட்டக்கல்வி காரியாலயத்துக்குட்பட்ட பாடசாலைகளினது அதிபர்களுக்கும் மாகாண அமைச்சர் மற்றும் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம். தாஹிர, கல்வி திணைக்கள அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடலும் கல்பிட்டி கோட்டக்கல்வி காரியாலயத்தில் இடம்பெற்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X