2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வாழ்வியல் தரிசனம் 04/02/2016

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 04 , மு.ப. 03:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

எப்பொழுதும் வெறுப்பான மனோநிலையில் வாழ முடியாது. சிலர் முகத்தைக் கடுகடுத்த வண்ணம் வெடுக்கென பிறரிடம் பாய்ந்தால், நொடிப்பொழுது நேரமாயினும் இவர்கள் முன்நிற்க மனம் வருமா?

உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகளில் சிலர் இதேபோல் முகத்தைக் கடுமையாக வைத்திருந்தாலே, ஏனைய ஊழியர்கள், பயந்து பயந்து வேலை செய்வார்கள் எனத் தப்புக் கணக்குப் போடுகின்றனர்.

இத்தகையவர்களின் முகம், காலவோட்டத்தில் இதுவே இயற்கையாகவும் அமைந்து விடலாம். 

என்றும், புன்னகையுடன் செய்யும் காரியங்கள் சித்தி பெறும். கொடிய பார்வையுடன் வெறுப்பான மனோநிலையில் செய்யும் காரியங்கள் முழுமை பெற்றுவிடுமா? 

அகம் விரிந்தால் முகம் சிரிக்கும்.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .