2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

சட்டவிரோத மணலகழ்வை மாவட்ட செயலர் கண்காணிக்க கோரிக்கை

Thipaan   / 2016 பெப்ரவரி 06 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி அக்கராயன் ஆற்றுப்பகுதி, அக்கராயன்குளத்தின் பின்பகுதி, அக்கராயன் மத்திக்கும் அக்கராயன் மேற்குக்குமிடைப்பட்ட வயல்பகுதிகளில் தொடர்ச்சியாக மணல் அகழ்வு இடம்பெறுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த வாரம் அக்கராயன் மத்தி கிராம அபிவிருத்திச் சங்கம் கிளிநொச்சி மாவட்டச் செயலருக்கு அக்கராயனில் நடைபெறும் மணல் அகழ்வினை கட்டுப்படுத்துமாறு மனுக் கையளித்திருந்தது.

ஆனால், அக்கராயன் மத்தி கிராம அபிவிருத்திச் சங்கத்தில் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களே அக்கராயன் ஆற்றுப்பகுதியில் தொடர்ச்சியாக மணல் அகழ்வில் ஈடுபட்டுள்ளனர்; என  அம் மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, மணலுடன் உழவியந்திரங்களை கைப்பற்றும் பொலிஸார் மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களை கொண்டுசென்று நீதிமன்றத்தில் முற்படுத்தாது விட்டுவிடுவதாகவும் பொது மக்களினால் தெரிவிக்கப்படுகின்றது.

அக்கராயன் மகா வித்தியாலயச் சூழல், விடந்தைப்பகுதி, அக்கராயன் தபாலகத்திற்கருகான பகுதி ஆகியவற்றில் பகல்வேளையில் கூட டிப்பர்களில் மணல் ஏற்றப்பட்டு வெளியிடங்களுக்குக் கொண்டுசெல்வதை பொலிஸார் கட்டுப்படுத்தவோ, கைதுசெய்யவோ நடவடிக்கையெடுப்பதில்லை அக்கராயனில் நடைபெறும் மணல் அகழ்வுக்கு பொலிஸாரின் பூரண ஆதரவு இருப்பதாக பொதுமக்களினால் தெரிவிக்கப்படுகின்றது.

அக்கராயனிலிருந்து வெளியிடங்களுக்கு முல்லைத்தீவு அமதிபுரம் படைமுகாம் வழியாகவும் பூநகரியின் சின்னப்பல்லவராயன்கட்டு படைமுகாம் வழியாகவும் ஆனைவிழுந்தான்குளம் படைமுகாம் வழியாகவும் மணல் கொண்டு செல்லப்படுவதாக பொதுமக்களினால் தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தில் கடந்த ஒக்ரோபர் மாதத்தில் மாவட்டச் செயலர் தலைமையில் நடைபெற்ற சூழல் சட்ட அமுலாக்கல் கூட்டத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் மணல் அகழ்வு, காடழிப்பு என்பவற்றை முழுமையாகக் கட்டுப்படுத்துவதென முடிவெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்டிருப்பதும் அக்கராயனில் பெரும் சூழலியல் ஆபத்தினை உருவாக்கியுள்ளது.

கிளிநொச்சி மாவட்டச் செயலர் நேரடியாக மணல் அகழ்வு தொடர்பான விவரங்களை அறிந்துகொள்ளுமாறு அக்கராயன்பகுதி விவசாயிகளும் கிராம அபிவிருத்திச்சங்கங்களும் மாதர் சங்கங்களும் பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .