2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

'சமஷ்டி முறையிலான ஆட்சியை நிச்சயமாக பெற்றுத்தரும்'

Niroshini   / 2016 பெப்ரவரி 06 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

1949ஆம் ஆண்டில் மட்டும் தமிழ் மொழியில் பாடப்பட்ட தேசிய கீதம், மீண்டும் 2016ஆம் ஆண்டு 68ஆவது சுதந்திர தினத்திலே தமிழ் மொழியில் பாடப்பட்டதானது நல்லாட்சி அரசாங்கத்தின் சிறந்ததொரு எடுத்துக்காட்டாகும். இதனை பார்க்கும் போது இந்த நல்லாட்சி அரசாங்கமானது எமது தமிழ் மக்களுக்கு சிறந்த விடிவை பெற்றுத்தரும் என்பதில் எதுவித ஐயப்பாடும் கொள்ளத் தேவையில்லை. அதற்காக தமிழர்களின் ஏகபிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 2016ஆம் ஆண்டில் எமது மக்களுக்கான விடிவாக வட கிழக்கு இணைந்த சமஷ்டி முறையிலான ஆட்சியை நிச்சயமாக பெற்றுத்தரும் என திகாமடுல்ல மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.

 நாவிதன்வெளி 15ஆம் கிராமம் விவேகானந்தா மகா வித்தியாலயத்தில் நேற்று (05) மாலை இடம்பெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர்  அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

விளையாட்டின் மூலம் உடல் நலம் மட்டுமல்ல உளநலமும் விருத்தியடைகின்றது. எதிர்காலத்திலே சிறந்த பிரஜைகளாக எங்களை வளர்த்துக் கொள்வதற்காக விளையாட்டு முக்கியத்துவம் பெறுகின்றது. இந்த நல்லாட்சி அரசாங்கமானது விளையாட்டுக்கு மிகவும் முக்கியத்தவம் கொடுத்திருக்கின்றது. எதிர்காலத்திலே சிறந்த நற்பிரஜைகளை இந்த நாட்டில் உருவாக்குவதற்காக நல்லாட்சி அரசாங்கம் முனைப்புடன் செயற்பட்டு வருகின்றது.

ஆகவே, நாம் ஒவ்வவொருவரும் இந்த நாட்டின் நற்பிரஜைகளாக, வளம் மிக்க பிரஜைகளாக, திறம்மிக்க பிரஜைகளாக, எதிர்காலத்தில் நடைபெறுகின்ற சம்பவங்களுக்கு முகம் கொடுக்கின்ற பிரஜைகளாக வளர்த்தெடுக்க வேண்டிய கடமைப்பாடு இருக்கின்றது.

கடந்த ஆட்சியாளர்களினால் எமது சமூகம் திட்டமிடப்பட்ட முறையிலே பல இன்னல்களுக்கும், அட்டூழியங்களுக்கும் உள்ளானது. ஆனால் இந்த நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் சுதந்திரமாகவும், சுயாதீனமாகவும் முடிவெடுக்கக்கூடிய நிலைமை காணப்படுகின்றது.

நாவிதன்வெளி பிரதேசம் கடந்த காலங்களிலே யுத்தங்களினால் பல அழிவுகளை எதிர்நோக்கிய பிரதேசம். இதனால் மாணவர்களின் கல்வியில் பின்னடைவு காணப்பட்டது. அவை அனைத்தையும் நிறைவு செய்து நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் சிறந்த, வலுவான, திறன்மிக்க பிரஜைகளாக மாணவச் செல்வங்ளை வளர்த்தெடுக்க வேண்டும்.

இதற்காக எமது வலயக் கல்வி பணிப்பாளர் அதிக அக்கறையுடன் செயற்பட்டு பூரண ஒத்துழைப்பு நல்கிவருகின்றார். மாணவர்களின் கல்வியில் பெற்றோரின் பங்களிப்பு அத்தியவசியமாதாக காணப்படுகின்றது என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .