2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாண ஆளுநர் சம்பூருக்கு விஜயம்

Niroshini   / 2016 பெப்ரவரி 06 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை, மூதூர், கிழக்கு சம்பூர் பகுதிக்கு செல்லும் வீதி தார் வீதியாக மாற்றப்பட உள்ளது. கடற்கரைச்சேனை நாவசலடி சந்தியில் இருந்து சம்புர் வரையான 4.5. கி.மீற்றர் தூரமான கிரவல் வீதி  தார் வீதியாக மாற்றப்பட உள்ளது.

இதற்கான அங்குராப்பண நிகழ்வு இன்று சனிக்கிழமை  காலை கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணாண்டோவால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

35 மில்லியன் ரூபாய் செலவில் இவ்வீதி இலங்கை கடற்படையினரால் அமைக்கப்பட உள்ளது.

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண வீதி அபிவிரத்தி நீர்பாசன வீடமைப்பு மகளீர் விவகாரம் காணி அமைச்சர் ஆரியவதிகலபதி, சுகாதார அமைச்சர் நசீர் அகமட், மாகாண சபை உறப்பினர் கு.நாகேஸ்வரன் . மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார, கிழக்கு மாகாண கடற்படை தளபதி ரியர் அட்மிரல் என்.பி.ஜே.ரொசைரோ  ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

இதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாண ஆளுநர் மீளக்குடியமரத்தப்பட்ட சம்புர் மக்களைச் சந்தித்து அவர்களது குறைகளைக் கேட்டறிந்து கொண்டார்.

கடந்த வருடம் ஆவணி மாதம் 22ம் திகதி இம்மக்கள் மீளக்குடியமர்த்தப்பட்டனர். 5 மாத காலப்பகுதியில் இப்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஆளுநர் பார்வையிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .