2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள வழிபாட்டுத்தலங்கள் அபிவிருத்தி

Sudharshini   / 2016 பெப்ரவரி 06 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணி ஸ்ரீ

இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களில் மிகவும் பின்தங்கிய பிரதேசங்களிலுள்ள வழிபாட்டுத்தலங்களை அபவிருத்தி செய்வதற்கு சப்ரகமுவ மாகாண சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

வழிபாட்டுத்தலங்களுக்கான குடிநீர், மலசலகூட வசதி, மின்சாரம் மற்றும் உடகட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தை சப்ரகமுவ மாகாண சபை ஆரம்பித்துள்ளது.

இதன் முதற்கட்டமாக கேகாலை மாவட்டத்தின்; ரம்புக்கனை அலகொல கந்த உச்சியில் அமைந்துள்ள பம்பதாராம விகாரைக்கான மின்சாரம், குடிநீர், மலசலகூட வசதி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் பணிகள் இன்று (6) கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கனக ஹேரத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதற்கென சப்ரகமுவ மாகாண சபையின் மூலம் 15 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு;ள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X