2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

25 வீட்டுத்திட்ட மக்களுக்கும் சுவீஸ் நாட்டு பிரதிநிதிக்கும் இடையில் கலந்துரையாடல்

Gavitha   / 2016 பெப்ரவரி 07 , மு.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட மக்களுக்கும் சுவீஸ் நாட்டின் பிரதி நிதிக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று சனிக்கிழமை (06), மன்னார் பள்ளிமுனை பொது மண்டபத்தில் இடம்பெற்றது.

கடந்த 3 வாரங்களுக்கு முன் சுவீஸ் நாட்டில் வசிக்கும் மனித உரிமை செயற்பாட்டாளருக்கிடையில் நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போது, பள்ளிமுனை மக்களின் சந்திப்பு பற்றி தெளிவு படுத்தியமைக்கு அமைவாக, இலங்கைக்குச் சென்று தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்துடன் சேர்ந்து புதிய அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்கள் பற்றியும் இந்த அபிவிருத்தியின் மூலமாக மக்களின் வாழ்கை நிலை எவ்வாறு அமைந்துள்ளது என்பதனை யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, கல்பிட்டி ஆகிய மாவட்டங்களுக்குச் சென்று பார்வையிட்டிருந்தனர்.

இந்த நிலையில், நேற்று மன்னாருக்கு வருகை தந்த சுவீஸ் நாட்டின் பிரதிநிதி, மன்னாரில் இடம் பெயர்ந்து மீள் குடியேற்றப்படாமல் இருக்கும் பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட மக்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனார்.

இதே வேளை, கடந்த 25 வருட காலமாக பள்ளிமுனை 25 வீட்டுத்திட்ட மக்கள், தங்களின் சொந்த காணிகளில் குடியேற முடியாத நிலையில் உள்ளதாக தெரிவித்தனர்.

இந்த மக்களின் காணிகளில் தற்போது கடற்படையின் குடி கொண்டுள்ளதுடன், காணிகளுக்குச் சொந்தமானவர்கள் அனைவரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் வசித்து வருகின்றனர்.

தங்களது காணிகளை தங்களுக்கே தருமாறு கோரி, பல ஆர்ப்பாட்டங்களை நடத்தியதாகவும் மகஜர்களை பலவற்றை கையளித்ததாகவும் மக்கள் இதன்போது தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .