2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஐக்கிய நாடுகளின் ஆணையாளர் திருகோணமலைக்கு விஐயம்

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 08 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்

வடக்கு மற்றும் கிழக்கில் காணமல் போனோர் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஸ்தாபனம் அதிக கவனம் செலுத்தி வருகின்றது. புதிய அரசாங்கமும் கவனம் செலுத்துவதற்கு ஆலோசனைகளையும் அறிவுறுத்தல்களையும் நாம் வழங்குவோம் என ஐ.நா.மனித உரிமை ஆணையாளர் செய்த் ராப் அல் ஹுசைன் தெரிவித்தாக கிழக்குமாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்தார். 

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருக்கும் ஐ.நா. மனித உரிமையாளர் {ஹசைன், திருகோணமலைக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) வருகை தந்த அவருடைய குழுவினரும் கிழக்குமாகாண முதலமைச்சர் காரியாலயத்தில் சந்தித்து கலந்துரையாடப்பட்டது .

மேலும், முதலமைச்சர் தெரிவிக்கையில் தற்போதைய புதிய அரசாங்கத்தில் நாம் அதிக நம்பிக்கை கொண்டுள்ளோம். இதன் மூலம் காணமல்போனோர் விடயத்தில் இலங்கை அரசு ஒரு தீர்மான முடிவை எடுக்கும் என நம்புகின்றோம் அதற்கான வலியுறுத்தல்களை உரியவர்கள் மூலம் தெரியப்படித்தியுள்ளோம் எனவும் முதலமைச்சர் கூறினார் .

இவை மட்டுமன்றி கிழக்கிலும் வடக்கிலும் உள்ள விதவைகளின் பாரிய பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும். அது போலவே இன்னும் சிறையில் வாழ்ந்து கொண்டிருக்கும் அரசியல் கைதிகள் விவகாரத்தில் அதிக கவனம் காட்டி வருவதோடு, மாகாண சபையின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதில் நாமும் அக்கறை கொண்டவர்களாக காணப்படுகின்றோம். குறிப்பாக நிதி விவகாரத்தில் பாரிய முன்னேற்றங்கள் கொண்டு வரப்பட வேண்டும். கிழக்கு அபிவிருத்தியில் புதிய திருப்புமுனை ஏற்பட வேண்டும் என்பதிலும் அதிக அக்கறை கொண்டுள்ளோம் .

கிழக்கு மாகாணம் அனைத்து மாகாணங்களுக்கும் ஒரு முன்மாதிரியாக விளங்குவது சந்தோசம் தரும் விடயமென ஆணையாளர் தெரிவித்ததாக முதலைச்சர் கூறினார் .

மேலும், கிழக்கு மாகாணத்தின் முதலீடு, வேலைவாய்ப்பு மற்றும் சம்பூர் மீள் குடியேற்றம், ஏனைய பகுதிகளில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களின் குடியேற்றம் போன்ற விவகாரங்கள் கலந்துரையாடப்பட்டதாக முதலமைச்சர் கூறினார் .

இக்கலந்துரையாடலின் போது கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி, சுகாதார அமைச்சர் நசீர் ,விவசாய அமைச்சர் துரைராஜசிங்கம், வீதி அபிவிருத்தி அமைச்சர் ஆரியவதி கலபதி மற்றும் சபை தவிசாளர் சந்திரதாச கலபதி ஆகியோரும் பிரசன்னமாகி இருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X