2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தோட்டப்பகுதி இளைஞர்களுக்கு சுயதொழில் பயிற்சியுடன் தொழில் வாய்ப்பு வழங்க நடவடிக்கை

Sudharshini   / 2016 பெப்ரவரி 08 , பி.ப. 12:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ. ரமேஸ்

விவசாயத்துறையில் ஈடுபாடுள்ள நுவரெலியா மாவட்ட தோட்டப்பகுதி இளைஞர்கள் பத்தாயிரம் பேரை தெரிவு செய்து, சுயதொழில் பயிற்சியுடன் தொழில் வாய்ப்புக்கள் வழங்க மத்திய மாகாண விவசாயத்துறை அமைச்சு மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய மாகாண விவசாயத்துறை மற்றும் இந்து கலாசார அமைச்சர் எம்.ரமேஸ் தெரிவித்தார்.

மேலும், இதில் தெரிவு செய்யப்படும் இளைஞர்களுக்கு அப்பகுதி தோட்டங்களில் விவசாயத்தை மேற்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி, அவர்களை மத்திய மாகாண விவசாயத்துறை அபிவிருத்தி அமைச்சில் இணைத்துக் கொள்ளபோவதாகவும் குறிப்பிட்டார்.

லிந்துலை சென்கூம்ஸ் மைதானத்தில் இடம்பெற்ற கிரிக்கெட் சுற்று போட்டியின் பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துகையிலேயே அவர்  மேற்கொண்டவாறு தெரிவித்தார்.

லிந்துலை கொணன் தோட்ட நிக்நைட் விளையாட்டு கழக தலைவர் எஸ். மகேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அவர் மேலும் தெரிவித்ததாவது,

'நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆறுமுகன் தொண்டமானின் வேண்டுகோளுக்கிணங்க, மத்திய மாகாணத்தில் விவசாயத்துறை அமைச்சை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், விவசாயத்துறையில் இளைஞர்களை ஈடுபடுத்தி இவ்வாண்டு இறுதிக்குள் தொழில் வாய்ப்புகளை பெற்றுகொடுப்பதற்கான நடவடிக்கை துரிதகதியில் முன்னெடுக்கப்படுகின்றது.

இதற்கான பயிற்சி நடவடிக்கைகள் மத்திய மாகாண விவசாய அமைச்சின் ஊடாக ஓரிரு வாரத்தில் முன்னெடுக்கப்படவுள்ளன' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .